AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எமனாக மாறிய தர்பூசணி பழம்? மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.. பின்னணி என்ன!

Mumbai 4 Members Death Same Family: மும்பையில் இரவு பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்ப்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுவதென்ன என்பதையும், தர்ப்பூசணியால் உயிரிழப்பு நிகழுமா என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எமனாக மாறிய தர்பூசணி பழம்? மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்.. பின்னணி என்ன!
4 பேர் உயிரிழப்புக்கு தர்ப்பூசணி பழம் காரணமா
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 28 Apr 2026 08:58 AM IST

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பைதோனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40 வயது), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் அவர்களது மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோ இரவு உணவு சாப்பிட்டு விட்டு தர்பூசணி பழத்தை சாப்பிட்டுள்ளனர். இதில் அவர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஜைத் என்பவர் கூறுகையில்: அப்துல்லா குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களது உறவினர்களுக்கு இரவு விருந்து அளித்திருந்தனர். அவர்கள் அனைவரும் இரவில் பிரியாணி சாப்பிட்டனர். பின்னர், உறவினர்களை தவிர்த்து அப்துல்லா குடும்பத்தினர் தர்பூசணி பழங்களை சாப்பிட்டுள்ளனர். இதில், சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரு நாளுக்கு முன்னதாக வாங்கிய தர்ப்பூசணி பழம்

ஆனால், அவர்களது உறவினர்கள் அந்த தர்பூசணி பழத்தை சாப்பிடாத காரணத்தால் அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். இந்த தர்பூசணி பழத்தை அப்துல்லா டோகாடியாவே பஜாரில் உள்ள மசூதிக்கு அருகே செயல்பட்டு வரும் சந்தையில் இருந்து வாங்கியதாக தெரிகிறது. இந்த பழம் ஒரு நாளைக்கு முன்னதாகவே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. உணவு பொருள்களில் ரசாயனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக இந்த பழங்களில் உணவு கலப்படம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதாரண தர்ப்பூசணி பழமே நச்சுத்தன்மை கொண்டதாக மாறி இருப்பது கவலை அளிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் படிக்க: மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?

துணிகளில் சுற்றி கொண்டு செல்லப்பட்ட நபர்கள்

அந்த நான்கு பேரும் மயங்கிய நிலையில் இருந்ததால், அவர்களை துணிகளில் சுற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதிகாலை சுமார் 1:30 மணியளவில் தர்பூசணி பழத்தை சாப்பிட்டவர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து வாந்தி எடுத்ததாகவும், அதிகாலை 4 மணியளவில் அவர்களின் நிலை மேலும் மோசம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஜே. ஜே. மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்கு பின் தர்ப்பூசணி பழம் சாப்பிட்டதால் உயிரிழப்பா

இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுகையில், தர்ப்பூசணி பழம் நஞ்சை ஏற்படுத்தக்கூடும். மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளை பொறுத்து அது தீவிரமான உடல் நல சிக்கல்களுக்கும், மரணத்திற்கும் வழி வகுக்கும். தர்பூசணி பழங்களில் உள்ள அதிக நீர் சத்து மற்றும் இயற்கையான சர்க்கரை சத்து, மாசு ஏற்பாட்டால் பாக்டீரியாக்கள் விரைவாக பெருகக்கூடிய ஒரு சூழலை உருவாக்குகிறது. இந்த பழங்களில் இனிப்பு சுவை, பழங்களின் தோற்றத்தை அதிகரிப்பதற்காக குளுக்கோஸ் நீர் அல்லது சர்க்கரை நீர் உள் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் தர்பூசணி பழங்களை சாப்பிடக்கூடாது என்று கூறினார்.

மேலும் படிக்க: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது த.வெ.கவினரா? போலீஸ் சொன்ன விளக்கம்..

Follow Us