AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹேப்பி நியூஸ்.. நிலக்கரி முதல் கிவி பழம் வரை.. வரி குறைக்கும் நியூசிலாந்து.. புது ஒப்பந்த விவரம்!

Free Trade Agreement Between India and New Zealand | இந்தியா பல்வேறு உலக நாடுகள் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ளது. அந்த வகையில், தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இந்த தடையற்ற ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

ஹேப்பி நியூஸ்.. நிலக்கரி முதல் கிவி பழம் வரை.. வரி குறைக்கும் நியூசிலாந்து..  புது ஒப்பந்த விவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Apr 2026 09:34 AM IST

புதுடெல்லி, ஏப்ரல் 27 : இந்தியா மற்றும் நியூசிலாந்து (India and New Zealand) இடையே இன்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) கையெழுத்தாகிறது. இதுவரை இந்தியா பல்வேறு உலக நாடுகளுடன் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது 4 மாதங்கள் கழித்து நியூசிலாந்து உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தாக உள்ள ஒப்பந்தம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ள இந்தியா

இந்தியா இதுவரை ஐக்கிய அர்பு அமீரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஓமன், ஐரோப்பிய ஒன்றியம், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களில், சில நாடுகள் உடனான ஒப்பந்தங்கள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த நிலையில் தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக டிசம்பர் 22, 2026 அன்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை – அமெரிக்க துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடி கருத்து

4 மாதங்களுக்கு பிறகு கையெழுத்தாகும் ஒப்பந்தம்

இந்த நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக மற்றும் முதலீட்டு மந்திரி டோட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இதையும் படிங்க : லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து முதியவர் கொலை.. நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்!

வர்த்தகத்தை 2 மடங்காக உயர்த்துவதே நோக்கம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு நியூசிலாந்து ஏற்றுமதி செய்யும் கம்பளி, நிலக்கரி, செம்மறி ஆடு இறச்சி, மர பொருட்கள், ஒயின், கிவி பழங்கள், ப்ளூபெர்ரி உள்ளிட்ட 95 சதவீத பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்படும் அல்லது குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்திய விவசாயிகள் மற்றும் தொழில்துறையை பாதுகாப்பதற்காக நியூசிலாந்தின் பால் பொருட்கள், வெங்காயம், சர்க்கரை, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய், ரப்பர் போன்றாவற்றுக்கு இந்தியா எந்த சலுகையும் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us