AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?

திருநெல்வேலி மாவட்டம் வழியாக சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்றின் பின்புறம் உள்ள எல்இடி திரையில் வழக்கமாக இருக்க வேண்டிய ஊர் பெயர்களுக்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் டிவிகே என்ற பயெர்கள் மாறி மாறி தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் – திருநெல்வேலியில் பரபரப்பு – என்ன நடந்தது?
அரசு பேருந்தில் தவெக பெயர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Apr 2026 19:09 PM IST

திருநெல்வேலி, ஏப்ரல் 27 : விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் விஜய்யின் தவெக எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் தவெகவின் பெயர் திருநெல்வேலி அரசு பேருந்தின் டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன் திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது பரபரப்பை எஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத நபர்கள் அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையின் மதர்போர்டை ஹேக் செய்து பெயர் மாற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மீண்டும் அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் தவெக பெயர்

திருநெல்வேலி மாவட்டம் வழியாக சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்றின் பின்புறம் உள்ள எல்இடி திரையில் வழக்கமாக இருக்க வேண்டிய ஊர் பெயர்களுக்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் டிவிகே என்ற பயெர்கள் மாறி மாறி தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசு பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் ஒரு அரசியல் கட்சியின் பெயர் எப்படி வந்தது என்பது குறித்து சமூக வலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையில் தவெக பெயர் இடம் பெறுவது இது முதன்முறை அல்ல. கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்திலும் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மதர்போர்டு சட்ட விரோதமாக ஹேக் செய்யப்பட்டது தெரியுந்தது.

இதனையடுத்து டிஜிட்டல் எல்ஜிடி தவகல பலகையை வழங்கும் நிறுவனத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தொழில்நுட்ப பாதுகாப்பை பலப்படுத்தவும். இது போன்ற சம்வபங்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow Us