AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!

Puducherry Assembly Election Exit Poll Results 2026 : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இதில், மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது .

Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!
புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 29 Apr 2026 21:45 PM IST

புதுச்சேரி, தமிழகம், கேரளம், அஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், புதுச்சேரி, அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேற்கண்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வருகிற மே 4- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்த நிலையில். பல்வேறு அமைப்புகள் சார்பில் எடுக்கப்பட்ட சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) வெளியிடப்பட்டது. இதில், புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியான கருத்துக்கணிப்பு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க: NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம்:

  • அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டணி – 6 முதல் 8 தொகுதிகள்.
  • அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கூட்டணி – 16 முதல் 20 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் 0 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 3 முதல் 7 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

ஜேவிசி நிறுவனம்:

  • அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டணி – 11 முதல் 13 சட்டமன்ற தொகுதிகள்.
  • அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கூட்டணி – 15 முதல் 17 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் – 1 முதல் 7 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் 0 தொகுதிகள்.

பீப்புள் பல்ஸ் நிறுவனம்:

  • அகில இந்திய காங்கிரஸ் கூட்டணி – 6 முதல் 8 தொகுதிகள்.
  • அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கூட்டணி – 15 முதல் 18 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் – 0 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் – 1 முதல் 12 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளன.

ஆக்சிஸ் மை:

  • அகில இந்திய காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 12 தொகுதிகள்.
  • அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 19 தொகுதிகள்.
  • தமிழக வெற்றிக் கழகம் – 0 தொகுதிகள்.
  • பிற கட்சிகள் – 0 தொகுதிகள்.

புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

புதுச்சேரி மாநிலத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், புதுச்சேரி பிராந்தியத்தில் 24 சட்டமன்ற தொகுதிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் தலா 1 சட்டமன்ற தொகுதிகளும் என 30 தொகுதிகள் உள்ளன. இதில், என். ஆர். காங்கிரஸ் கூட்டணி குறைந்தது 15 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், பாரதீய ஜனதா கட்சி 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. அதிமுக எந்த தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை.

மேலும் படிக்க: ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?

Follow Us