AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு… மீண்டும் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. கிரிஷ் ஜோடங்கர் எய்த அம்பு!

Girish Jodankar Latest Pressmeet: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைமையிடம் காங்கிரஸ் கட்சிக்கான உரிமைகளை கேட்டு பெறுவோம், அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவோம் என்று அந்தக் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிர்ஷ் ஜோடங்கள் தெரிவித்தார்.

திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு… மீண்டும் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. கிரிஷ் ஜோடங்கர் எய்த அம்பு!
ராகுல் காந்தி, ஸ்டாலின்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 29 Apr 2026 14:29 PM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரலை உயர்த்த தொடங்கி இருக்கிறது. இது அந்த கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியலில் இனி ஒருபோதும் நடுநிலை வகிக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறும் நிலையில் உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் மறு சீரமைக்கப்பட வேண்டும்

நிச்சயமாக காங்கிரஸ் கட்சியும் அதன் தொண்டர்களும், உள்ளூர் தலைவர்களும், தேசிய தலைவர்களும் தமிழகம் மறு சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். கூட்டணிகளுக்கு ஆட்சி அமைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில், மு. க. ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார். 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைப்பதை தடுப்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

மேலும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் கட்சி நடுநிலை சக்தியா இருக்காது

இதன் மூலம் வேறு ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கட்சியினர் இடையே பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முடிவுகளுக்காக நாம் அனைவரும் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஆனால், இனி காங்கிரஸ் கட்சியால் ஒரு நடுநிலை சக்தியாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றதும் எங்களுக்கான உரிமையை கேட்டு விடுவோம்.

காங்கிரஸ் உரிமையை கேட்டுப் பெறுவோம்

எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம் கட்சியை வலுப்படுத்துவதற்காக எங்களது உரிமைகளை கேட்டு பெறுவோம் என்று தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்ர் தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தது. இதில். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுதல் என்பன உள்ளிட்ட கருத்துக்களை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை”.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!

Follow Us