“சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை”.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!
இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
சென்னை, ஏப்ரல் 29: புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் சாதி ரீதியான வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதியின் பெயரால் இளைஞர்களின் எதிர்காலமும் வாழ்க்கையும் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் திருமலைராயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் ஹரிஹரன்(20). இவரை, கடந்த 21-ம் தேதியில் இருந்து காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்தனர். இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், திருமலைராயபுரம் பகுதியில் உள்ள கல் குவாரியில் சடலமாக கிடந்தது 23-ம் தேதி தெரியவந்தது. அன்றைய தினமே அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரித்து வந்தனர்.
இதையும் படிக்க: பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
ஹரிஹரன் இறப்பில் மர்மம்:
இந்நிலையில், இறந்த ஹரிஹரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பெண்ணின் குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் ஹரிஹரன் இறந்திருக்கலாம் என்பதால் பெண்ணின் குடும்பத்தினரை வழக்கில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஹரிஹரினியின் சடலத்தை வாங்காமல் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஹரிஹரன் உயிரிழந்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஹரிஹரன் மரணம் குறித்த கோரிக்கை:
நேற்று (28.04.2026) புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூர் தாலுகா நடுப்பட்டி பகுதியை சேர்ந்த விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் (20) மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர்…
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 29, 2026
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நேற்று (28.04.2026) புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூர் தாலுகா நடுப்பட்டி பகுதியை சேர்ந்த விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் (20) மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது. சாதி வேறுபாடு என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவது, மனிதநேயத்திற்கும் சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூரமான செயலாகும். இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நடைபெறுவது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது.
சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவால்:
இளைஞர்கள் மீது நடத்தப்படும் சாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க : புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரும் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..
ஹரிஹரன் குடும்பத்திற்கு இரங்கல்:
மேலும், இவ்வாறான சாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்திற்கும் அரசுக்கும் உள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிஹரனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.