AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு என புகார் எழுந்தது. மேலும், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. 

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Apr 2026 12:58 PM IST

சென்னை, ஏப்ரல் 29 : செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு என புகார் எழுந்தது. மேலும், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது மின்மாற்றி கொள்முதல் செய்த போது முறைக்கேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம்

தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2023 வரை திமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 48 ஆயிரத்துக்கும் அதிகமாக மின்மாற்றிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நேரத்தில் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இது தொடர்பாக அரப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையும் படிக்க : புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரும் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..

மேலும் இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி சரவணன் உள்ளிட்ட சிலர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஏப்ரல் 29, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் பேசிய வழக்கறிஞர், அதிக விலைில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்து ம் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் பகார் தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கூறுகையில், கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் பின்பற்றும் நடைமுறையிலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளா ஒரே விலையை நிர்ணயித்துள்ளனர். மாநில முழுவுதும் பழுதான மின்மாற்றிகளை மாற்ற முடியாத நிலை ஏற்படும் என்றும் விளக்கம் அளித்தார். பின்னர் பேசிய நீதிபதிகள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நடத்தி வரும் முதற்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த மார்ச் 9, 2026 அன்று தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க : விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!

இந்த நிலையில் அறப்போர் இயக்கம் சார்பில் மீண்டும் இந்த வழக்கை சிபிஜைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு ஏப்ரல் 9, 2026 அன்று விசாரணைக்கு வ்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow Us