AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு.. மது போதையில் அடிக்கடி தகராறு.. மன வேதனையில் மகனை கொன்ற தாய்!

Madurai Crime: மதுரையில் மது போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை பெற்ற தாயை அம்மி கல்லை போட்டு துடிக்கதுடிக்க கொலை செய்தார். இந்த சம்பவத்தில் அந்த பெண் கைது செய்யப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு.. மது போதையில் அடிக்கடி தகராறு.. மன வேதனையில் மகனை கொன்ற தாய்!
மாதிரிப் புகைப்படம்Image Source: tv9
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 28 Apr 2026 08:11 AM IST

மதுரை பெருங்குடி ஆதிசிவன் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் ( 30 வயது). இவருக்கு திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் பொற்கொடியுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், மது போதைக்கு அடிமையான சிவபெருமாள், தனது தாய் பொற்கொடியிடம் அடிக்கடி மது அருந்துவதற்கு பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், மது போதையில் வீட்டுக்கு வந்து அடிக்கடி பொற்கொடியுடன், சிவபெருமாள் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல நேற்று சிவபெருமாள் மது போதையில் வீட்டுக்கு வந்ததுடன், தனது தாய் பொற்கொடியிடம் வீண் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் வீட்டிலேயே படுத்து தூங்கி உள்ளார். தினமும் மது போதையில் வந்து தன்னிடம் தகராறு செய்து வருவதை எண்ணி மனவேதனை அடைந்த பொற்கொடி வீட்டில் இருந்த அம்மி கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த சிவபெருமான் தலையில் போட்டார்.

தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மகன்

இதில், தலையில் இருந்து ரத்தம் பிளிரிய நிலையில், துடிக்க துடிக்க சிவபெருமான் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது சிவபெருமாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரது அருகில் தாய் பொற்கொடி கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருந்தார். பின்னர் இது தொடர்பாக பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவபெருமானின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக அமரர் ஊர்தி மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!

போலீசாரிடம் பொற்கொடி அளித்த வாக்குமூலம்

இதைத் தொடர்ந்து, அவரது தாய் பொற்கொடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், எனது மகன் சிவபெருமாள் தினமும் மதுபோதையில் வந்து என்னிடம் தகராறு செய்து வந்தார். குடிப்பதற்காக தினமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த நான் அவரை கொலை செய்ததாக கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்தார்.

மதுரை பகுதியில் பெரும் பரபரப்பு

இதைத் தொடர்ந்து, பொற்கொடி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மதுரையில் மது போதையில் தகராறு செய்து வந்த மகனை, பெற்ற தாயே மன வேதனையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..

Follow Us