NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
NTK Exit Poll Results 2026: இந்த கருத்துக்கணிப்புகளின் படி, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 6 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 29, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை அடங்கும். தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்தித்துள்ளது. நான்கு முனைப் போட்டி இருந்தாலும், பிரதான போட்டி திமுக மற்றும் அதிமுக இடையேதான் உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு எவ்வளவு?
இந்த கருத்துக்கணிப்புகளின் படி, தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 6 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தொடங்கியதிலிருந்து இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறது. கடந்த தேர்தலில், இந்தக் கட்சி சுமார் 8% வரை வாக்கு வங்கியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. சுமார் 4 முதல் 5% வரை மட்டுமே வாக்குகள் கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்.. வெற்றி யாருக்கு? வெளியான கருத்து கணிப்பு..
எத்தனை இடங்களில் வெற்றி பெரும்?
அதே நேரத்தில், அதிகபட்சமாக 6 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
- People’s Insight: 0 முதல் 4 இடங்கள்
- PMARQ: 1 முதல் 6 இடங்கள்
- Matrize: 0 முதல் 6 இடங்கள்
- People’s Pulse: 2 முதல் 6 இடங்கள்
கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு, இந்த தேர்தலில் சில இடங்களில் வெற்றி கிடைத்தாலும், வாக்கு சதவீதம் கணிசமாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!
இதற்கு முக்கிய காரணமாக தமிழக வெற்றிக் கழகம் வருகை கருதப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.