AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Assembly Election Exit Poll Result: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்.. வெற்றி யாருக்கு? வெளியான கருத்து கணிப்பு..

Assembly Election Exit Poll Result 2026: ஏற்கனவே தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், தற்போது மாலை 6:30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

Assembly Election Exit Poll Result: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்.. வெற்றி யாருக்கு?  வெளியான கருத்து கணிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Apr 2026 19:01 PM IST

ஏப்ரல் 29, 2026: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ளது. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், மாலை 6:30 மணி முதல் கருத்துக்கணிப்புகள் வெளியிடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போது கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் புதுச்சேரி, கேரளம், அசாம், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இந்த மாதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்:

முக்கியமாக, புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  மேற்குவங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெற்றது.

தேர்தல் முடிவதற்கு முன் கருத்துக்கணிப்புகள் வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்த பின்னரே கருத்துக்கணிப்புகள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டது.

வெளியான கருத்து கணிப்பு:

ஏற்கனவே தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், தற்போது மாலை 6:30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தல் முடிவுகள் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது கணிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு தற்போது வெளியாகும் கருத்துக்கணிப்புகள் மூலம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

கேரளம்: 

  • மேட்டரைஸ் நிறுவனம் (Matrize):
    • எல்டிஎப் – 60 முதல் 65 இடங்கள்
    • தேசிய ஜனநாயக கூட்டணி – 3 முதல் 5 இடங்கள்
    • யூடிஎப் – 75 முதல் 85 இடங்கள்
  • வோட் வைப்:
    • எல்டிஎப் – 58 முதல் 68 இடங்கள்
    • தேசிய ஜனநாயக கூட்டணி – 0 முதல் 4 இடங்கள்
    • யூடிஎப் – 70 முதல் 80 இடங்கள்
  • பீப்பள்ஸ் இன்சைட் நிறுவனம் (People’s Insight):
    • எல்டிஎப் – 58 முதல் 68 இடங்கள்
    • தேசிய ஜனநாயக கூட்டணி – 10 முதல் 14 இடங்கள்
    • யூடிஎப் – 66 முதல் 76 இடங்கள்
  • பீப்பள்ஸ் பல்ஸ் (People’s Pulse):
    • எல்டிஎப் – 60 முதல் 65 இடங்கள்
    • தேசிய ஜனநாயக கூட்டணி – 3 முதல் 5 இடங்கள்
    • யூடிஎப் – 70 முதல் 75 இடங்கள்

மேற்குவங்கம்: 

  • பிஎம்ஆர்க் நிறுவனம் (PMARC):
    • டிஎம்சி – 118 முதல் 138 இடங்கள்
    • பாஜக – 150 முதல் 175 இடங்கள்
    • காங்கிரஸ் – 2 முதல் 6 இடங்கள்
  • மேட்டரைஸ் நிறுவனம் (Matrize):
    • டிஎம்சி – 125 முதல் 140 இடங்கள்
    • பாஜக – 146 முதல் 161 இடங்கள்
    • மற்றவை – 10 இடங்கள் வரை
  • பீபள்ஸ் பல்ஸ் (People’s Pulse):
    • டிஎம்சி – 117 முதல் 127 இடங்கள் (திருத்தப்பட்டது)
    • பாஜக – 95 முதல் 110 இடங்கள்
    • காங்கிரஸ் – 1 முதல் 3 இடங்கள்
    • இடதுசாரி கட்சிகள் – 0 முதல் 1 இடம்

அசாம்: 

  • அக்சஸ் மை இந்தியா (Axis My India):
    • பாஜக மற்றும் கூட்டணி – 88 முதல் 100 இடங்கள்
    • காங்கிரஸ் – 24 முதல் 36 இடங்கள்
  • மேட்டரைஸ் நிறுவனம் (Matrize): 
    • பாஜக – 85 முதல் 95 இடங்கள்
    • காங்கிரஸ் – 25 முதல் 32 இடங்கள்
  • ஜேவிசி நிறுவனம் (JVC):
    • பாஜக – 88 முதல் 101 இடங்கள்
    • காங்கிரஸ் – 23 முதல் 33 இடங்கள்
  • பீபள்ஸ் இன்சைட் (People’s Insight):
    • பாஜக – 88 முதல் 96 இடங்கள்
    • காங்கிரஸ் – 30 முதல் 34 இடங்கள்

Follow Us