AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..

கருத்துக்கணிப்புகளை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள். எல்லாம் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்; மாலை 5 மணிக்குள் அடுத்த ஆட்சியை அமைப்பது யார் என்பது தெரிந்து விடும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 May 2026 16:54 PM IST

சென்னை, மே 1, 2026: மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி அமோக வெற்றி பெறும்; அண்ணன் ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். அதேபோல், தேமுதிக 10 இடங்களிலும் வெற்றி பெறும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தேமுதிக 10 இடங்களிலும் வெற்றிப்பெறும்:

அப்போது பேசிய அவர், “கருத்துக்கணிப்புகளை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள். எல்லாம் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்; மாலை 5 மணிக்குள் அடுத்த ஆட்சியை அமைப்பது யார் என்பது தெரிந்து விடும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

மேலும் படிக்க: திருச்சி அருகே தவெக அலுவலகம் மர்ம நபர்களால் தீவைத்து எரிப்பு.. நடந்தது என்ன?

எங்கள் மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி அமோக வெற்றி பெறும். அண்ணன் ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். அதேபோல், நாங்கள் 10 இடங்களில் போட்டியிட்டுள்ளோம்; கேப்டன் விஜயகாந்தின் ஆசீர்வாதத்துடன் 10 பேரும் சட்டசபைக்கு செல்வோம்.

எங்களை யாராவது பாராட்டினாலும் தேமுதிக தான்; விமர்சித்தாலும் தேமுதிக தான். ‘பழுத்த மரம் தான் கல்லடி படும்’ என்பதுபோல், விமர்சனங்களுக்கு மே 4ஆம் தேதி பதில் அளிப்போம்” என தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறின. சில கணிப்புகள் மட்டுமே அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தன.

இந்த நிலையில், மே 4ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த வாக்கு எண்ணிக்கையில், 234 தொகுதிகளின் முடிவுகளும் வெளியாக உள்ளன.

தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. திமுக மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், அதிமுகவும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

Follow Us