AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“இதற்காகத் தான் பால் பொருட்கள் விலையை உயர்த்தினோம்!”.. விளக்கம் அளித்தது ஆவின் நிர்வாகம்!!

Aavin Issues Official Explanation: பால் மற்றும் பால் உப பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதற்கான காரணங்களை விளக்கி ஆவின் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவைச் சமாளிக்கவும், பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காக்கவும் இந்த விலை திருத்தம் அவசியமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதற்காகத் தான் பால் பொருட்கள் விலையை உயர்த்தினோம்!”.. விளக்கம் அளித்தது ஆவின் நிர்வாகம்!!
ஆவின் பால் பொருட்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Oct 2026 13:52 PM IST

சென்னை, அக்.27: தமிழகத்தில் முன்னணிப் பொதுத்துறை நிறுவனமாகத் திகழும் ஆவின் நிறுவனம், எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு நெய், வெண்ணெய், தயிர், மோர் மற்றும் பல்வேறு வகையான இனிப்புப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்தது பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு நுகர்வோர் பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவுக்கான பின்னணி என்ன என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன. பொதுமக்களின் இந்த நியாயமான சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையைப் பேணும் நோக்கிலும் ஆவின் நிர்வாகம் தற்போது தரமான விளக்கத்தை அளித்துள்ளது.

இதையும் படிக்க: மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பண்டிகைக் காலத்தில் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருட்களின் விலை கடும் உயர்வு!!

அதிகரித்து வரும் உற்பத்திச் செலவு:

விலை உயர்வு குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும், நுகர்வோருக்குத் தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதும் தங்களது முதன்மைக் குறிக்கோள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான குடும்பங்களின் முக்கியத் தொழிலாக விளங்கும் பால் உற்பத்தியில், தற்போது அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், தீவன விலை ஏற்றம் மற்றும் இதர பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. சந்தையில் இயங்கி வரும் பிற தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநில கூட்டுறவு நிறுவனங்களின் பொருட்களின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஆவின் பொருட்களின் விலை இப்போதும் கணிசமாகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே ஒதுக்கீடு:

ஆவின் நிறுவனத்தின் இந்த விலை திருத்தமானது எந்தவிதமான லாப நோக்கம் கொண்ட வணிக நடவடிக்கையும் அல்லவென்றும், மாறாகத் தொடர் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டவும் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் போட்டித் தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட தவிர்க்க முடியாத நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்தின் மூலம் பெறப்படும் கூடுதல் வருவாயில் 90 சதவீத்திற்கும் அதிகமான தொகையானது நேரடியாகப் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே முழுமையாகப் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலை மேம்படுவதோடு, கிராமப்புறக் கூட்டுறவு பால் கொள்முதல் கட்டமைப்பும் மேலும் வலுவடையும் என ஆவின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: புழல் சிறையில் அடைக்கப்பட்ட உயிர் நண்பன்.. நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன உதயநிதி ஸ்டாலின்..

மக்களின் ஆதரவைக் கோரும் ஆவின்:

பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டே விலை உயர்வு மிகக் குறைந்த அளவிலேயே திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், இந்த இக்கட்டான சூழலில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் கூட்டுறவுத்துறையை வளர்த்தெடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் தங்களது வழக்கமான ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக அரசின் உயர் முன்னுரிமை பெற்ற விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்குத் துணை நிற்கும் வகையில், பொதுமக்கள் ஆவின் பொருட்களைத் தொடர்ந்து வாங்கி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அந்த விளக்கத்தில் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Follow Us