தீவிர உடற்பயிற்சியில் நடிகை சிம்ரன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Simran Work Out Video: 90ஸ் கிட்ஸ்களி கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் தென்னிந்திய சினிமாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று கூறும் அளவிற்கு பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக பலப் படங்களில் நடித்து வந்தார் நடிகை சிம்ரன்.
இந்தி சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை சிம்ரன். இவர் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் பின்பு மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடிகையாக அறிமுகம் ஆகி தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ஒன்ஸ் மோர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் நடிகை சிம்ரன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் விஜய், அஜித் குமார், ரஜினிகாந்த், கமல் ஹாசன், பிரசாந்த், சூர்யா, அர்ஜுன், பிரபு தேவா, மாதவன் மற்றும் சரத்குமார் என பலருக்கு நாயகியாக நடிகை சிம்ரன் கலக்கியுள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




தீவிர உடற்பயிற்சியில் நடிகை சிம்ரன்:
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் நாயகியாக நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து முக்கிய கதாபபத்திரங்களில் நடிகை சிம்ரன் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை சிம்ரனின் கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தற்போது 49 வயதை உடைய நடிகை சிம்ரன் தற்போதும் இளமையாக தோற்றமளிக்க காரணம் அவர் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தொடர்ந்து தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது தங்கமே தங்கமே பாடலின் லிரிக்கல் வீடியோ
நடிகை சிம்ரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Endurance over excuses🔥#NeverGiveUp #StayStrong pic.twitter.com/cgh8hmp84L
— Simran (@SimranbaggaOffc) January 29, 2026
Also Read… Thaai Kizhavi: ‘தாய் கிழவி’ பட ராதிகாவின் கதாபாத்திரம் – மேக்கிங் வீடியோ வெளியீடு!