New Champions In Cricket: ஆர்சிபி முதல் இந்திய மகளிர் அணி வரை.. இந்த ஆண்டு 3 புதிய சாம்பியன்கள்..!
ICC Womens World Cup 2025: 52 வருட காத்திருப்புக்குப் பிறகு நேற்று முன் தினம் அதாவது 2025ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி நவி மும்பையில் நடந்த முதல் ஐசிசி கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது. இறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.
                                2025ம் ஆண்டு கிரிக்கெட் பயணம் பல புதிய அணிகளுக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ளது. இந்த 2025ம் ஆண்டு பல புதிய சாம்பியன் அணிகள் தோன்றி, பல வருட வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து கோப்பையை வென்றனர். சமீபத்தில், இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை (ICC Womens World Cup) வென்றது. இந்த 2025ம் ஆண்டு இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) வெற்றி பெறுவதற்கு முன்பு, ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோல், தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. கிரிக்கெட் உலகின் 3 முக்கிய போட்டிகளில் 3 புதிய சாம்பியன்கள் உருவாகியுள்ளனர்.
ALSO READ: இந்திய அணிக்கு ஆதரவு! நமது கிரிக்கெட் வீரர்கள் எங்கே? விளாசிய தென்னாப்பிரிக்கா எழுத்தாளர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2009, 2011 மற்றும் 2016 ஐபிஎல் சீசன்களின் ஆர்சிபி அனி இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, இறுதியாக 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்றனர். போட்டி முழுவதும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களின் கூட்டு முயற்சியால் ஆர்சிபி அணி முதல் பட்டத்தை வழங்கியது.




தென்னாப்பிரிக்கா அணி:
தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. கடந்த 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி முதல் ஐசிசி கோப்பையை வென்றது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 27 ஆண்டுகால வறட்சியை தென்னாப்பிரிக்கா அணி முடிவுக்குக் கொண்டு வந்தது.
ALSO READ: பெண்கள் கிரிக்கெட் விளையாட தேவையில்லை.. வைரலாகும் சவுரவ் கங்குலியின் பழைய வீடியோ!
இந்திய மகளிர் அணி:
52 வருட காத்திருப்புக்குப் பிறகு நேற்று முன் தினம் அதாவது 2025ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி நவி மும்பையில் நடந்த முதல் ஐசிசி கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது. இறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனாவும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தீப்தி சர்மாவும் போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர். இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா 87 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இந்திய அணி அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெளிப்படுத்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.