T20 World Cup 2026: போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற மறுத்த ஐசிசி.. வங்கதேச அணியின் அடுத்த திட்டம் என்ன?
Bangladesh Cricket Board: வங்கதேசம் தனது பிடிவாதத்தை கைவிடவில்லை என்றால், அதன் புள்ளிகள் உலகக் கோப்பையிலிருந்து கழிக்கப்படும். மேலும், வங்கதேசம் போட்டியில் இருந்து விலகினால், அது அந்த அணிக்கு குறிப்பிடத்தக்க இழப்பை பெறும். இது ஐ.சி.சி.யிடமிருந்து அதன் வருவாய் பங்கைப் பாதிக்கும் மற்றும் நிதி அபராதங்களுக்கு வழிவகுக்கும்.
2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நிராகரித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, 2026 டி20 உலகக் கோப்பைக்காக தனது அணியை இந்தியாவிற்கு அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மறுத்துவிட்டது. ஊடக அறிக்கைகளின்படி, இந்தியாவில் இருந்து இடத்தை மாற்றுவதற்கான கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்து, உலகக் கோப்பை போட்டிகளை விளையாட வங்கதேச அணி இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெளிவாக தெரிவித்தது.
ALSO READ: மிக குறைந்த பட்ஜெட்.. இல்லாத ஸ்பான்சர்.. விரைவில் தொடங்கும் ஐஎஸ்எஸ் 2026!
வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி:
ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இருந்த வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்க கோரி பிசிசிஐ உத்தரவிட்டது. இதன் காரணமாக, 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவிற்கு வர மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோவின்படி, வங்கதேசம் அணி இந்தியாவில் இருந்து இடத்தை மாற்றுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், 2026 டி20 உலகக் கோப்பையை விளையாட இந்தியா செல்ல வேண்டியிருக்கும் என்றும் ஐ.சி.சி பிசிபியிடம் தெளிவாகத் தெரிவித்தது. அறிக்கையின்படி, வங்கதேச அணி இந்தியாவுக்கு பயணம் செய்யவில்லை என்றால், அதன் புள்ளிகள் கழிக்கப்படும். இதற்கிடையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் அத்தகைய எந்தவொரு பைனல் எச்சரிக்கையைப் பெறவில்லை என்று மறுத்துள்ளது.




வங்கதேச அணிக்கு இந்தியாவில் விளையாடுவதால் எந்த ஆபத்தும் இல்லை என்று ஐ.சி.சி வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது. எனவே, வங்கதேச அணியின் போட்டிகளுக்கான இடத்தை மாற்றுவதற்கு ஐ.சி.சி எந்தவொரு முக்கிய காரணத்தையும் முழுமையாக இல்லை என்று தெரிவித்தது.
வங்கதேச அணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
சர்வதேச போட்டிகள் மற்றும் பலதரப்பு போட்டிகளை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தும் திறனை இந்தியாவும், பிசிசிஐ பல முறை நிரூபித்துள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடத்தை மாற்றுவதற்கான கோரிக்கை அடிப்படையில் ஆதாரமற்றவையாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கிரிக்கெட் உலகில் பிசிசிஐயின் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுடனான நல்ல உறவை மேற்கொள்ள வேண்டும் என வங்கதேச அணி மும்பை மற்றும் கொல்கத்தாவில் தனது உலகக் கோப்பை போட்டிகளை திட்டமிட்டபடி விளையாட வேண்டும்.
ALSO READ: 2026 உலகக் கோப்பையில் விவிஐபி பாதுகாப்பு.. மறுத்த வங்கதேசம்.. வழி தெரியாமல் தவிக்கும் பிசிசிஐ!
அதேநேரத்தில், வங்கதேசம் தனது பிடிவாதத்தை கைவிடவில்லை என்றால், அதன் புள்ளிகள் உலகக் கோப்பையிலிருந்து கழிக்கப்படும். மேலும், வங்கதேசம் போட்டியில் இருந்து விலகினால், அது அந்த அணிக்கு குறிப்பிடத்தக்க இழப்பை பெறும். இது ஐ.சி.சி.யிடமிருந்து அதன் வருவாய் பங்கைப் பாதிக்கும் மற்றும் நிதி அபராதங்களுக்கு வழிவகுக்கும். மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ உடனான உறவில் பாதிக்கப்பட்டால், அது வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.