T20 World Cup 2026: 2026 உலகக் கோப்பையில் விவிஐபி பாதுகாப்பு.. மறுத்த வங்கதேசம்.. வழி தெரியாமல் தவிக்கும் பிசிசிஐ!
Bangladesh National Cricket Team: வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாடு, பாகிஸ்தானின் பாதையைப் பின்பற்ற விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கடந்த 2025ம் ஆண்டு, சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததால், இந்திய அணியின் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டன. அதற்கு ஈடாக, பாகிஸ்தானும் தனது அணியை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது.
2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 World Cup) இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றிருக்கும் பிசிசிஐ ஆகியவை 2026 டி20 உலகக் கோப்பைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன. ஆனால். கடைசி நேரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) புதிய முடிவை எடுத்துள்ளது. இது பிசிசிஐக்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது. ஒருபுறம், வங்கதேச அணி இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை விளையாட முடியாது என்று கூறி வருகிறது. மறுபுறம், பிசிசிஐ இந்த நேரத்தில் அட்டவணையை மாற்ற முடியாது என்றும் கூறி வருகிறது. இரு வாரியங்களுக்கும் இடையிலான இந்த கௌரவப் போரை தீர்ப்பது ஐசிசிக்கு ஒரு பெரிய சவாலாகவுள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில், பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இந்தியாவுக்கு பயணம் செய்ய மறுத்த வங்கதேசம், “விவிஐபி பாதுகாப்பு” வழங்கப்பட்ட போதிலும், இப்போது இந்தியாவில் விளையாட மறுத்துவிட்டது என்று வங்கதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ALSO READ: டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசம் விலகுகிறதா..? என்ன நடக்கும்..?
பிசிசிஐ அறிவிப்பை நிராகரித்த வங்கதேசம்:
வங்கதேச ஊடக அறிக்கையின்படி, இன்று அதாவது 2026 ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற ஆன்லைன் கூட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் ஐ.சி.சி இந்த விவகாரம் குறித்து விவாதித்தது. வங்கதேச வாரியம் எழுப்பியுள்ள பாதுகாப்பு குறைகளை பூர்த்தி செய்ய வங்கதேச அணிக்கு மாநில அளவிலான பாதுகாப்பை (வி.வி.ஐ.பி. பாதுகாப்பு) வழங்க பிசிசிஐ முன்மொழிந்துள்ளது.




ஆனால் இந்த உத்தரவாதம் இருந்தபோதிலும்,வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது அணியை டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு அனுப்பத் தயாராக இல்லை என்று ஐசிசிக்கு முறைசாரா முறையில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அதாவது 2026 ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிசிசிஐயின் முன்மொழிவை ஐசிசி முறையாக வங்கதேச வாரியத்திடம் சமர்ப்பித்தது. இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த முன்மொழிவை நிராகரிக்க வாய்ப்புள்ளது.
ALSO READ: பிசிசிஐக்கு அதிர்ச்சி! வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்ற ஐசிசி! போட்டி இடம் மாற்றமா?
பாகிஸ்தானின் பாதையில் வங்கதேசம்:
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாடு, பாகிஸ்தானின் பாதையைப் பின்பற்ற விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கடந்த 2025ம் ஆண்டு, சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததால், இந்திய அணியின் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டன. அதற்கு ஈடாக, பாகிஸ்தானும் தனது அணியை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. அதன் பிறகு, 2026 மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன. இந்த 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி தனது போட்டிகளை இலங்கையில் விளையாடும். வங்கதேசம் இப்போது இதேபோல் தனது போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே அதாவது இலங்கையில் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, வருகின்ற காலக்கட்டத்தில் ஐசிசி எத்தகைய முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.