IND vs NZ 1st T20I: கடைசி நேரத்தில் அடிசறுக்கிய நியூசிலாந்து.. அட்டகாச வெற்றியை பதிவு செய்த இந்திய அணி
IND vs NZ 1st T20I Innings Highlights: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஒருதலைப்பட்சமாக வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ T20 Series) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி அற்புதமான தொடக்கத்தை பெற்றது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவின் கடைசி டி20 தொடர் இதுவாகும். இந்த ஐந்து போட்டிகளும் இந்திய அணி (Indian Cricket Team) தன்னை நிரூபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் அசத்தி, டி20 உலகக் கோப்பைக்கு தயாராகுவதை நிரூபித்தது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ALSO READ: சர்ச்சைக்குரிய ஸ்டம்பிங்.. அம்பயரிடம் வாக்குவாதம்.. டெல்லி வீராங்கனைக்கு அபராதம்!




அபிஷேக் சர்மா – ரிங்கு சிங்கின் அசத்தல் பேட்டிங்:
A commanding performance! 🔝#TeamIndia win by 4⃣8⃣ runs in Nagpur to take a 1⃣-0⃣ lead in the 5-match T20I series 👏
Scorecard ▶️ https://t.co/ItzV352h5X#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/BuAT0BluHk
— BCCI (@BCCI) January 21, 2026
இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர்.
இன்னிங்ஸின் கடைசி ஓவர்களில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், நியூசிலாந்து அணிக்காக ஜேக்கப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ்டியன் கிளார்க், மிட்செல் சாண்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
239 ரன்கள் இலக்கு:
239 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது பந்திலேயே அர்ஷ்தீப் சிங்கிற்கு அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர் ஹர்திக் பாண்ட்யா இரண்டாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரவை வெளியேற்றி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இருப்பினும், கிளென் பிலிப்ஸ் ஒரு அதிரடியான இன்னிங்ஸை விளையாடி, 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்தார். மார்க் சாப்மேனும் தன் பங்கிற்கு 39 ரன்கள் எடுத்தார். ஆனால் இது அணிக்கு போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ALSO READ: இந்திய ஜெர்சியில் விராட் – ரோஹித் அடுத்து எப்போது களமிறங்குவார்கள்..? யாருடன் மோதும் இந்திய அணி?
வருண் சக்ரவர்த்தி மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.