Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: கனடா அணிக்கு கேப்டனாக 22 வயது இந்தியர்.. டி20 உலகக் கோப்பையில் அசத்துமா இளம் படை?

Canada T20 World Cup Squad: 2026 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனடாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் நிறைந்துள்ளனர். கேப்டன் தில்ப்ரீத் பஜ்வாவைத் தவிர, கனடா அணியில் அஜய்வீர் ஹண்டல், அன்ஷ் படேல், ரவீந்தர்பால் சிங், சிவம் சர்மா, ஷ்ரேயாஸ் மௌப்ரே மற்றும் யுவராஜ் சாம்ரா போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

T20 World Cup 2026: கனடா அணிக்கு கேப்டனாக 22 வயது இந்தியர்.. டி20 உலகக் கோப்பையில் அசத்துமா இளம் படை?
கனடா கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jan 2026 14:47 PM IST

கனடா தனது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில், 2024 ஆம் ஆண்டு தனது முதல் டி20 உலகக் கோப்பையை விளையாடிய கனடா அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2026ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு (T20 World Cup 2026) தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கான கனடா அணிக்கு (Canada) இந்தியாவில் பிறந்து வளர்ந்த தில்ப்ரீத் பஜ்வா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மிகவும் ஆர்ச்சயப்படும் விதமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தில்ப்ரீத் பஜ்வாவுக்கு 22 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச் சேர்ந்தவர் தில்ப்ரீத் பஜ்வா:

தில்ப்ரீத் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள குருதாஸ்பூரில் பிறந்தார். இவர் தனது கல்வியை தரிவாலில் உள்ள குரு அர்ஜுன் தேவ் சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார். தில்ப்ரீத் தந்தை ஹர்ப்ரீத் சிங் விவசாயியாகவும், அதே நேரத்தில் அவரது தாயார் ஹர்லீன் கவுர் அரசு ஆசிரியராகப் பணியாற்றினார். 2020ம் ஆண்டில், பஞ்சாப் மாநில அணியால் தேர்ந்தெடுக்கப்படாத காரணத்தினால் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

ALSO READ: U19 உலகக் கோப்பையில் இந்திய அணி கெத்து.. அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

இந்தியர்களால் நிரம்பிய கனடா அணி:


2026 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனடாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் நிறைந்துள்ளனர். கேப்டன் தில்ப்ரீத் பஜ்வாவைத் தவிர, கனடா அணியில் அஜய்வீர் ஹண்டல், அன்ஷ் படேல், ரவீந்தர்பால் சிங், சிவம் சர்மா, ஷ்ரேயாஸ் மௌப்ரே மற்றும் யுவராஜ் சாம்ரா போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

2026 டி20 உலகக் கோப்பைக்கான கனடா அணி

தில்பிரீத் பஜ்வா (கேப்டன்), அஜய்வீர் ஹண்டால், அன்ஷ் படேல், திலான் ஹெலிகர், ஹர்ஷ் தாக்கூர், ஜஸ்கரந்தீப் பட்டர், கலீம் சனா, கன்வர்பால் தத்குர், நவ்நீத் தலிவால், நிக்கோலஸ் கிர்டன், ரவீந்தர்பால் சிங், சாத் பின் ஜாபர், ஷிவம் ஷர்மா, ஷ்ரேயாஸ் மவ்வா.

ALSO READ: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.. உலகக் கோப்பைக்கு டவுட்..!

கனடா அணியின் அட்டவணை:

குரூப் ஏ-யில் இடம்பிடித்துள்ள கனடா அணி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற அணிகளை எதிர்கொள்ள உள்ளது. கனடா அணி தனது உலகக் கோப்பைப் பயணத்தை வருகின்ற 2026 பிப்ரவரி 9 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, வருகின்ற 2026 பிப்ரவரி 13ம் தேதி டெல்லியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டிகளும், வருகின்ற 2026 பிப்ரவரி 17 மற்றும் 19ம் தேதிகளில் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளிலும் கனடா அணி விளையாடியுள்ளது.