AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் – முதல்வர் அறிவிப்பு

Rajya Sabha Elections : மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் – முதல்வர் அறிவிப்பு
திருச்சி சிவா - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Mar 2026 22:14 PM IST

சென்னை, மார்ச் 4 : மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக (DMK) வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார். மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிகாலம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதனயடுத்து விரைவில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற மார்ச் 16, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் படி திமுக கூட்டணியில் 6ல் 4 முதல் 5 இடங்களை எளிதில் கைப்பற்றும் எனக்கூறப்படுகிறது.

 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள்

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவுக்கான 4 இடங்களில்,  காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேமுதிகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரூ. 5300 கோடி மதிப்பீட்டில் புதிய டயர் தொழிற்சாலை.. தமிழக அரசுடன் எம்.ஆர்.எஃப் நிறுவனம் ஒப்பந்தம்..

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவு

 

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற குறைந்தது 34 முதல் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக 4 முதல் 5 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களில் ஒருவரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் திருநெல்வேலியை சேர்ந்தவர். எம்.இ, எம்சிஏ, எம்பிஏ, எல்எல்பி, பிஎச்.டி ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடியுள்ளார். மேலும் தேமுதிகவில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்து வருகிறார்.

இதையும் படிக்க : உறுதியான திமுக காங்கிரஸ் கூட்டணி.. எத்தனை இடங்கள் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..

சமீபகாலமாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் திமுகவின் முகமாக ஆழமான கருத்துக்களை நிதானமாகவும் அதிரடியாகவும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் திமுகவின் சார்பில் நாடாளுமன்றத்தில் திமுகவின் சார்பில் தரவுகளுடன் பேசக் கூடிய திறன் கொண்டவர் என்பதால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் காங்கிரஸ் மற்றும் தேமுதிகவுக்கு தலா ஒரு இடங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் தேமுதிக கட்சிகள் விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us