திமுக அளிக்கும் 25 இடங்களை ஏற்ககூடியது அல்ல… கிரிஷ் சோடங்கரின் பேச்சால் பரபரப்பு
Congress On DMK Offer : காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியதாவது, திமுக வழங்கிய 25 இடங்களை ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றார் தொடர்ந்து தவெக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தவெக ஒரு புதிய கட்சி. நாம் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றார்.
சென்னை, மார்ச் 1 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. இருப்பினும் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறியாகவே இருந்து வருகிறது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 28, 2026 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சுமார் ஒருமணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
25 இடங்களை ஏற்க முடியாது’
இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் திமுக அளிக்கும் 25 இடங்கள் ஏற்புடையது அல்ல. புதிய கட்சியான தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது. காஹ்கிரஸ் கட்சி மற்றும் திமுக இடையே பிப்ரவரி 28, 2026 அன்று ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் சமர்பித்த விருப்ப பட்டியலை ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம் என்றார்.




இதையும் படிக்க : முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!
கிரிஷ் சோடங்கர் பேசிய வீடியோ
#WATCH | Delhi: On seat-sharing talks with DMK, All India Congress Committee (AICC) In-Charge for Tamil Nadu Girish Chodankar says, “Our committee and their committee, we had a hour long discussion yesterday. We only hope that the wish list that we have submitted will be accepted… pic.twitter.com/62BvhwwrUZ
— ANI (@ANI) March 1, 2026
இதையும் படிக்க : “ஓபிஎஸ்-ஐ தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”.. பியூஸ் கோயல் சரமாரி தாக்கு..
மேலும் பேசிய அவர், எங்களுடைய முன்னுரிமை சட்டமன்ற தேர்தல். இதன் மூலம் கிடைக்கும் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ராஜ்யசபாவில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க முடியும். திமுக எங்களுக்கு 25 இடங்களை வழங்கியுள்ளது. அதை ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றார் தொடர்ந்து தவெக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தவெக ஒரு புதிய கட்சி. நாம் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. தவெகவிற்கு இளைஞர்களிடையே வரவேற்பு இருக்கிறது. மேலும் அவர்கள் காங்கிரஸின் பலத்தையும் எங்கள் தலைவர் ராகுல் காந்தியையும் அங்கீகரித்து வருகின்றனர் என்றனர்.