Axar Patel Injury: அக்சர் படேலின் விரல் காயம்.. பதற்றத்தில் பிசிசிஐ.. டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் மாற்றமா?
T20 World Cup 2026: நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த நியூசிலாந்து இன்னிங்ஸின்போது இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் காயமடைந்தார். பந்துவீச்சின்போது அக்சர் படேல் ரத்தம் சிந்தும் நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார். இது இந்திய ரசிகர்களுக்கு கவலையை அதிகரித்துள்ளது.
ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் விதமாக இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை (IND vs NZ T20 Series) சிறப்பாக தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில், இந்தியா நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது. இருப்பினும், நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. போட்டியின்போது அக்சர் படேலின் (Axar Patel) காயம் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பதற்றத்தில் உள்ளனர். முன்னதாக, திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: கடைசி நேரத்தில் அடிசறுக்கிய நியூசிலாந்து.. அட்டகாச வெற்றியை பதிவு செய்த இந்திய அணி




அக்சர் படேலுக்கு நடந்தது என்ன..?
Another injury scare for Axar Patel! 😟
The spinner walks off the field with a finger injury. 🤯
The last thing India wants before the World Cup!
Let’s hope it’s nothing serious with the T20 World Cup 2026 coming up soon! 🤞🏏#AxarPatel #INDvsNZ pic.twitter.com/4cFdJ1gJsy— Cricket Addiction (@CricketAdd1ct) January 21, 2026
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த நியூசிலாந்து இன்னிங்ஸின்போது இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் காயமடைந்தார். பந்துவீச்சின்போது அக்சர் படேல் ரத்தம் சிந்தும் நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார். 16வது ஓவரில் பந்து வீசும்போது இந்த சம்பவம் நடந்தது. முதல் இரண்டு பந்துகளில் அக்சர் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இருப்பினும், மூன்றாவது பந்தில், டேரில் மிட்செல் லெக் ஸ்டம்பில் இருந்து வெளியே வந்து ஃபுல்லர் பந்தில் ஷார்ட் அடித்தார். பந்தைத் தடுக்கும் முயற்சியில், அக்சர் தனது இடது கையை நீட்டினார். அப்போது, அவரது விரலை தாக்கி பந்து பவுண்டரி எல்லைக்கு ஓடியது.
பந்து தாக்கிய பிறகு, அக்சர் வலியால் துடிப்பது தெரிந்தது. பிசியோ உடனடியாக மைதானத்திற்கு வந்தார். பரிசோதனையின் போது, அக்சரின் விரலில் இருந்து ரத்தம் வழிவது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அக்சர் மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு, சூர்யகுமார் யாதவ் பந்தை அபிஷேக் சர்மாவிடம் கொடுத்தார், அதன் பிறகுதான் 16வது ஓவரை முடிக்க முடிந்தது.
துணை கேப்டன் விளையாடுவாரா..?
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளதால். அவரது காயம் எவ்வளவு தீவிரமானது, எப்போது அவர் மீண்டும் களத்தில் இறங்க முடியும் என்பதில்தான் இப்போது அனைவரின் கவனமும் உள்ளது. குறிப்பாக டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கும் குறைவான நேரமே உள்ளதாலும், பிப்ரவரி 7 ஆம் தேதி போட்டி தொடங்க உள்ளதாலும், அக்சரின் உடற்தகுதி இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறலாம்.
ALSO READ: பிசிசிஐ எந்த வீரருக்கும் ரூ.7 கோடி சம்பளம் வழங்காதா? விராட்-ரோஹித்துக்கு குறையும் சம்பளம்!
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்