T20 World Cup 2026: இட மாற்ற வாக்கு எண்ணிக்கை.. வங்கதேசம் தோல்வி.. கடைசி எச்சரிக்கை விடுத்த ஐசிசி!
Bangladesh Cricket Team: வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டால், அது அதன் வீரர்களுக்கு மட்டுமே பிரச்சனையாக அமையும். பல முன்னாள் வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவில் விளையாட சம்மதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேநேரத்தில், தற்போதைய வங்கதேச டி20 கேப்டன் லிட்டன் தாஸ் கூட இந்த விவகாரம் குறித்துப் பேசினால் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) வங்கதேச அணி இன்னும் விளையாடுமா? வெளியேறுமா? என்ற கேள்வி நிலவி வருகிறது. வங்கதேசத்தின் போட்டியை இலங்கைக்கு மாற்ற மறுத்துவிட்ட ஐசிசி (ICC), வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு மேலும் 24 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டில் தொடர்ந்தால், வங்கதேச கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்படும். வங்கதேச அணி இந்தியாவில் விளையாடினால் ஆபத்து இருப்பதாகவும், இதன் காரணமாக தங்களது அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறி வருகிறது. இருப்பினும், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் இருந்து நீக்கப்பட்ட பிறகு வங்கதேசம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
ALSO READ: ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வா..? ஹிண்ட் கொடுத்த ரவீந்திர ஜடேஜா!




ஐ.சி.சி வாக்கெடுப்பில் வங்கதேசம் தோல்வி:
ICC Board votes to replace Bangladesh with Scotland 🚨 📢
Bangladesh has been given a day to take the verdict to its government and return with a final decision.
Vote count: 14–2 against Bangladesh’s demands.#T20WorldCup2026 #INDvNZ pic.twitter.com/aPKbfQdyfZ
— Saffron Hawk 🦅 (@SaffronHawk) January 21, 2026
தங்களது இடத்தை மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையின் மீது ஐசிசி நேற்று அதாவது 2025 ஜனவரி 21ம் தேதி வாக்கெடுப்பு நடத்தியது. அதில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி உறுப்பினர்களிடம் 2-14 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் மட்டுமே வங்கதேசத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. மீதமுள்ள அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐக்கு ஆதரவு அளித்தன. அதன்படி, ஐசிசி வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை அதன் வங்கதேச அரசாங்கத்தை சமாதானப்படுத்துமாறு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில், 2026 டி20 உலகக் கோப்பைக்கு வேறு அணி தேர்ந்தெடுக்கப்படும். ஒருவேளை டி20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் வெளியேற்றப்பட்டால், ஸ்காட்லாந்து அதன் இடத்தில் விளையாடும்.
ALSO READ: சர்ச்சைக்குரிய ஸ்டம்பிங்.. அம்பயரிடம் வாக்குவாதம்.. டெல்லி வீராங்கனைக்கு அபராதம்!
வங்கதேச வீரர்களின் எதிர்காலம் ஆபத்தா..?
வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டால், அது அதன் வீரர்களுக்கு மட்டுமே பிரச்சனையாக அமையும். பல முன்னாள் வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவில் விளையாட சம்மதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேநேரத்தில், தற்போதைய வங்கதேச டி20 கேப்டன் லிட்டன் தாஸ் கூட இந்த விவகாரம் குறித்துப் பேசினால் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறினார். தற்போதைய வங்கதேச வீரர்களும் டி20 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறார்கள். இப்போது முடிவு வங்கதேச அரசாங்கத்திடம் உள்ளதால், இன்று அதாவது 2026 ஜனவரி 22ம் தேதியே முழு விவரமும் தெரிய வரும்.