BCCI Central Contract: பிசிசிஐ எந்த வீரருக்கும் ரூ.7 கோடி சம்பளம் வழங்காதா? விராட்-ரோஹித்துக்கு குறையும் சம்பளம்!
Virat Kohli Rohit Sharma Salary: ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்படும். இரு வீரர்களும் பி-கிரேடுக்கு தரமிறக்கப்பட இருக்கின்றனர். தற்போது, பி-கிரேடு வீரர்கள் ஆண்டுதோறும் ரூ.3 கோடி சம்பளம் பெறுகிறார்கள். இதன் பொருள் விராட் மற்றும் ரோஹித் இப்போது ரூ. 7 கோடிக்கு பதிலாக ரூ. 3 கோடி சம்பளம் கிடைக்கும்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ (BCCI), மத்திய ஒப்பந்தத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. கிடைத்த ஊடக அறிக்கைகளின்படி, பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்திலிருந்து ஏ+ தரத்தை முற்றிலும் நீக்க இருக்கிறது. முன்னதாக, ஏ+ தரத்தில் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, இந்த 4 அனுபவ வீரர்களும் சம்பளத்தில் பெரிய தொகையை இலக்க இருக்கின்றனர். பிசிசிஐயின் கிரேடு ஏ+ ஒப்பந்தத்தின் கீழ், வீரர்கள் ஆண்டுதோறும் ரூ.7 கோடி சம்பளமாக பெறுகிறார்கள். ஆனால் இந்த கிரேடு இனி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ இப்போது ஏ, பி மற்றும் சி கிரேடுகளை உள்ளடக்கிய மூன்று பிரிவுகளை மட்டுமே வைக்க முடிவு செய்துள்ளது.
ALSO READ: ஐபிஎல் ஸ்பான்சராக கூகிளின் AI நிறுவனம்.. பிசிசிஐக்கு கொட்டப்போகும் கோடிகள்..!




ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு குறையும் சம்பளம்:
ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்படும். இரு வீரர்களும் பி-கிரேடுக்கு தரமிறக்கப்பட இருக்கின்றனர். தற்போது, பி-கிரேடு வீரர்கள் ஆண்டுதோறும் ரூ.3 கோடி சம்பளம் பெறுகிறார்கள். இதன் பொருள் விராட் மற்றும் ரோஹித் இப்போது ரூ. 7 கோடிக்கு பதிலாக ரூ. 3 கோடி சம்பளம் கிடைக்கும். இந்த வரிசையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் பி-கிரேடுக்கு தரமிறக்கப்படலாம். அதேநேரத்தில், ஜஸ்பிரித் பும்ராவும் ஏ-கிரேடுக்கு தரமிறக்கப்படலாம். பிசிசிஐ இன்னும் ஏ-கிரேடு வீரர்களுக்கு ரூ. 5 கோடி வழங்குமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. அப்படி நடந்தால், பும்ராவும் ரூ. 2 கோடி சம்பளத்தை இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எந்த வீரர் எந்த ஒப்பந்தத்தில் உள்ளனர்..?
🚨MOST LIKELY BCCI’S CENTRAL CONTRACT 2025-26🚨
Grade A:
Jasprit Bumrah, Shubman Gill, Axar Patel, Kuldeep Yadav.Grade B:
Virat Kohli, Rohit Sharma, Kl Rahul, Hardik Pandya, Jadeja, Siraj, Harshit, Jaiswal, Sundar, Arshdeep.Grade C:
Ruturaj Gaikwad, Shreyas Iyer, Jurel,… pic.twitter.com/Zkpu5RPpu8— MANU. (@IMManu_18) January 21, 2026
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மொத்தம் 34 வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. அவர்களில் 19 பேர் சி-கிரேடு ஒப்பந்தங்களில் இடம் பெற்றுள்ளனர். தற்போது, பி-கிரேடில் ஐந்து வீரர்கலும், ஏ கிரேடில் 6 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அதேநேரத்தில், 4 வீரர்கள் ஏ-பிளஸில் உள்ளனர்.
ALSO READ: இட மாற்ற வாக்கு எண்ணிக்கை.. வங்கதேசம் தோல்வி.. கடைசி எச்சரிக்கை விடுத்த ஐசிசி!
ஏ-பிளஸ் :
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.
ஏ கிரேடு :
முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட்
பி கிரேடு :
சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர்.
சி கிரேடு :
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா