IPL 2026: முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்-க்கு திரும்ப அழைத்ததா பிசிசிஐ? வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்!
Bangladesh Cricket Board: கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களும் சில அறிக்கைகளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும், இது முஸ்தாபிசுர் ஐபிஎல்லுக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறி வருகின்றன. இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் இப்போது இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் 2026-ல் (IPL 2026) இருந்து திடீரென நீக்கப்பட்டது இந்தியாவிற்கும் வங்கதேச கிரிக்கெட்டுக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders) முஸ்தாபிசுரை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது. ஆனால், வங்கதேசத்தில் இந்துகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, இரு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையிலான சர்ச்சை தொடர்ந்து ஆழமடைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களும் சில அறிக்கைகளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும், இது முஸ்தாபிசுர் ஐபிஎல்லுக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறி வருகின்றன. இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் இப்போது இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
BCB தலைவரின் அறிக்கை:
முஸ்தாபிசுர் ஐபிஎல்லுக்கு திரும்புவது குறித்து பிசிசிஐயுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமினுல் இஸ்லாம் புல்புல் திட்டவட்டமாகக் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ”முஸ்தாபிசுர் ஐபிஎல்லுக்கு திரும்புவது குறித்து பிசிசிஐயுடன் நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதுபோன்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை” என்று கூறினார். இதன்மூலம் முஸ்தாபிசுர் ஐபிஎல்லுக்கு திரும்புவது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.




ALSO READ: பிசிசிஐ விதிகளை மீறிய ஹர்திக் பாண்ட்யா.. பிரச்சனையை எதிர்கொள்வாரா..?
சர்ச்சைக்கு காரணம் என்ன?
ஐபிஎல் 2026 சீசனில் இருந்து முஸ்தாபிசுர் நீக்கம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை கோபப்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வங்கதேசம் தங்கள் நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பைத் தடை செய்ததுடன், 2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு ஒரு அணியை அனுப்பவும் மறுத்துவிட்டது. பாதுகாப்பு பிரச்சனைகளை காரணம் காட்டி, வங்கதேசம் தனது போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
தமீம் இக்பால் அறிவுரை:
முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கம் தொடர்பான விஷயத்தில் நிதானமாக இருக்குமாறு வங்கதேச முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபோன்ற முடிவுகளை உணர்ச்சி ரீதியாக எடுக்கக்கூடாது என்றும், அவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வங்கதேச கிரிக்கெட்டை பாதிக்கக்கூடும் என்றும் கூறினார்.
ALSO READ: வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுமா? இந்த முடிவு யாருக்கு பாதிப்பு?
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாடு என்ன..?
இதற்கிடையில், வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகரான ஆசிஃப் நஸ்ருல், இந்தியாவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், ஐபிஎல்லில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் விலக்கப்பட்டது இனி ஒரு வீரரின் பிரச்சினை மட்டுமல்ல, அது இந்தியா-வங்காளதேச கிரிக்கெட் உறவுகளிலும், 2026 டி20 உலகக் கோப்பையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.