Virat Kohli: கட்டாயத்தால் டெஸ்டில் இருந்து கோலி ஓய்வு.. முன்னாள் கிரிக்கெட்டர் அடுக்கிய புகார்!
Virat Kohli’s Test Retirement: முன்னதாக, முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் மஞ்ச்ரேக்கர், “விராட் கோலி கடினமான டெஸ்ட் வடிவத்தை கைவிட்டு எளிதான ஒருநாள் போட்டி வடிவத்தை தேர்ந்தெடுத்தார்” என்று குறிப்பிட்டார். இதுகுறித்து இன்சைட் ஸ்போர்ட்டுக்கு பேட்டியளித்த மனோஜ் திவாரி, “மஞ்ச்ரேக்கரின் கருத்திற்கு நான் உடன்படவில்லை." என்றார்.
இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர விராட் கோலி (Virat Kohli) கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கிட்டத்தட்ட டெஸ்டில் கோலி ஓய்வு பெற்று 9 மாதங்கள் ஆகியும் அவரது ஓய்வு குறித்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி தற்போது ஒரு கருத்தை முன்வைத்து, விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளார். அதில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து கோலி ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டது. அது அவரது சொந்த முடிவு கிடையாது என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ALSO READ: கோரிக்கை நிராகரிப்பு! 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!




கோலி ஓய்வும், சர்ச்சையும்..
🚨INSIDESPORT EXCLUSIVE🚨
MANOJ TIWARY CALLS OUT GAUTAM GAMBHIR FOR MAKING THE TEAM ENVIRONMENT TOXIC & HAVING A ROLE IN REMOVING SENIOR PLAYERS LIKE ASHWIN, VIRAT & ROHIT.#crickettwitter pic.twitter.com/Cl4k2k3XNN
— InsideSport (@InsideSportIND) October 6, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றது தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில். சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி செயல்திறன் அற்புதமாக உள்ளது. அதேநேரத்தில், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் சக வயதுடைய வீரர்களான ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் சதங்களை அடித்து வருகின்றனர். இதனால் கோலியின் ஓய்வு தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மனோஜ் திவாரி சொன்னது என்ன..?
முன்னதாக, முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் மஞ்ச்ரேக்கர், “விராட் கோலி கடினமான டெஸ்ட் வடிவத்தை கைவிட்டு எளிதான ஒருநாள் போட்டி வடிவத்தை தேர்ந்தெடுத்தார்” என்று குறிப்பிட்டார். இதுகுறித்து இன்சைட் ஸ்போர்ட்டுக்கு பேட்டியளித்த மனோஜ் திவாரி, “மஞ்ச்ரேக்கரின் கருத்திற்கு நான் உடன்படவில்லை. கோலி ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை உருவானது உண்மைதான். ஆனால், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை தானே முடிவு செய்யும் நபர் கோலி அல்ல. இதற்கு பின்னால் உள்ள கதை அனைவருக்கும் தெரியும்.
எல்லாவற்றையும் அறிந்திருந்தும், ரன்கள் எடுப்பதற்காகக் கடினமான ஒன்றை விட எளிதான வடிவத்தைத் கோலி தேர்ந்தெடுத்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
கில் கேப்டன்ஷி எப்படி..?
அக்டோபர் 4, 2025 அன்று ரோஹித்துக்குப் பதிலாக சுப்மன் கில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், சுப்மன் கில் தலைமையில் விளையாடிய 2 ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்தது.
ALSO READ: வெற்றியை தொடருமா இந்திய அணி..? தடை போடுமா நியூசிலாந்து? பிட்ச் யாருக்கு சாதகம்?
இன்சைட் ஸ்போர்ட்டுடனான உரையாடலில், கில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா என்று கேட்டபோது மனோஜ் திவாரி ஆம் என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், ”ஆம், நிச்சயமாக தவறை சரிசெய்ய இன்னும் நேரம் இருப்பதால் நான் இதைச் சொல்கிறேன். இது சில இருதரப்பு தொடர்கள் அல்லது ஒரு சாதாரண போட்டியைப் பற்றியது மட்டுமல்ல, இது உலகக் கோப்பையைப் பற்றியது. ரோஹித் சர்மா கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா நியூசிலாந்திடம் தோற்றிருக்காது. ரோஹித் கேப்டனாக இருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் 85 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். கில்லை விட ரோஹித்தின் தலைமையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்” என்றார்.