Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sophie Molineux: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு புதிய கேப்டன்.. ஆல்ரவுண்டரை களமிறக்கும் நிர்வாகம்..!

Australia Womens Cricket Team: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சோஃபி மோலினோ ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார். மேலும், இந்தத் தொடருக்குப் பிறகு சோஃபி மோலினோ ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரின் கேப்டனாகவும் பொறுப்பேற்பார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Sophie Molineux: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு புதிய கேப்டன்.. ஆல்ரவுண்டரை களமிறக்கும் நிர்வாகம்..!
சோஃபி மோலினோImage Source: australia cricket/twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jan 2026 10:27 AM IST

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் (Australia Womens Cricket Team) புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் சோஃபி மோலினோ அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு நீண்ட காலமாக அலிசா ஹீலிக்கு கேப்டனாக இருந்து வந்தார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அலிசா ஹீலி (Alyssa Healy) ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி புதிய கேப்டனை தேடி வந்தது. அந்தவகையில், சோஃபி மோலினோ அனைத்து வகையான வடிவங்களிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனை இறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான அணியையும் அறிவித்துள்ளனர்.

ALSO READ: மந்தனா- முச்சல் திருமணம் ஏன் முறிந்தது? வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக களமிறங்கும் சோஃபி மோலினோ:


இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சோஃபி மோலினோ ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார். மேலும், இந்தத் தொடருக்குப் பிறகு சோஃபி மோலினோ ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரின் கேப்டனாகவும் பொறுப்பேற்பார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சுற்றுப்பயணத்தில் விளையாடும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலியாவின் கேப்டனாக அலிசா ஹீலி இருப்பார். இதனை தொடர்ந்து, அலிசா ஹூலி சர்வதேச கிரிக்கெட்டில் முழுமையாக ஓய்வு பெறுவார்.

துணை கேப்டன் யார்..?

ஆஷ்லீ கார்ட்னர் மற்றும் தஹ்லியா மெக்ராத் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது இந்த இரு வீராங்கனைகளும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன்களாக இருப்பார்கள். அதேநேரத்தில், சோஃபி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அலிசா ஹீலியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக WPL 2026 இல் இருந்து விலகிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட், 3 ஆஸ்திரேலிய அணிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா டி20 அணி vs இந்தியா:

சோஃபி மோலினோ (கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர் (துணை கேப்டன்), தஹ்லியா மெக்ராத் (துணை கேப்டன்), டார்சி பிரவுன், நிக்கோலா கேரி, கிம் கிராத், கிரேஸ் ஹாரிஸ், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வால், ஜார்ஜியா வேர்ஹாம்

ALSO READ: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர்.. வெளியான அட்டவணை விவரம்!

ஆஸ்திரேலியா அணி vs இந்தியா – ஒருநாள் போட்டி

அலிசா ஹீலி (கேப்டன்), சோஃபி மோலினோ (துணை கேப்டன்), டார்சி பிரவுன், நிக்கோலா கேரி, ஆஷ்லீ கார்ட்னர், அலானா கிங், கிம் கிராத், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், அலிசா பெர்ரி, அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வால், ஜார்ஜியா வேர்ஹாம்

ஆஸ்திரேலியா vs இந்தியா – டெஸ்ட் அணி

அலிசா ஹீலி (கேப்டன்), சோஃபி மோலினோ (துணை கேப்டன்), டார்சி பிரவுன், லூசி ஹாமில்டன், ஆஷ்லீ கார்ட்னர், அலானா கிங், கிம் கிராத், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், அலிசா பெர்ரி, அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வால், ஜார்ஜியா வேர்ஹாம்