Smriti – Muchhal: மந்தனா- முச்சல் திருமணம் ஏன் முறிந்தது? வெளியான அதிர்ச்சி தகவல்!
Smriti Mandhana-Palaash Muchhal: பலாஷ் முச்சலும் ஸ்மிருதி மந்தனாவும் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தனர். திருமணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மந்தனாவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கடைசி நிமிடத்தில் அவர்களின் திருமணம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.
பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் (Palash Muchhal) மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் (Smriti Mandhana) திருமணம் முறிந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால், எதனால், இந்த திருமணம் முறிந்தது என்ற காரணம் மட்டுமே இதுவரை தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு நடந்த உண்மைக் கதையை நடிகர்-தயாரிப்பாளர் விக்யான் மானே தற்போது வெளியிட்டுள்ளார். அதில், முச்சால் மந்தனாவை ஏமாற்றியதாகவும், பாடகர் முச்சல் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக பிடிபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ALSO READ: கட்டாயத்தால் டெஸ்டில் இருந்து கோலி ஓய்வு.. முன்னாள் கிரிக்கெட்டர் அடுக்கிய புகார்!




இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்மிருதி மந்தனாவின் தோழி பலாஷ் முச்சலை அடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கிரிக்கெட் வீராங்கனை பால்ய நண்பர் விக்யான் மானே இந்துஸ்தான் டைம்ஸிடம் பேசியதாவது, ”நாங்கள் திருமணத்திற்காக சென்றபோது (நவம்பர் 23, 2025) முச்சல் வேறொரு பெண்ணுடன் படுக்கையில் கையும் களவுமாக பிடிபட்டார். அது ஒரு கொடூரமான காட்சி. இதன்பிறகு, முச்சலை இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஒருவரால் தாக்கப்பட்டார். அவரது முழு குடும்பமும் ஒரு திருட்டு குடும்பம். கடந்த மாதம், நான் அவரது தாயாரை (அமிதா முச்சால்) சந்தித்தபோது, படத்தின் வெளியீட்டு பட்ஜெட் இப்போது ரூ.1.5 கோடியாக உயர்ந்துள்ளது என்று அவர் என்னிடம் கூறினார். அவர்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்யச் சொன்னார்கள், இல்லையெனில் எனக்கு எந்தப் பணமும் திரும்பக் கிடைக்காது. அவர்கள் என்னை மிரட்டத் தொடங்கினர், படத்திலிருந்து என்னை நீக்குவதாக மிரட்டினர், அதனால் நான் புகார் அளிக்க வேண்டியதாயிற்று.” என்று தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து மானே பேசுகையில், “திருமணம் ரத்து செய்யப்பட்ட பிறகு, குடும்பத்தினர் என்னுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டனர். படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்கள் சம்பளத்தைப் பெறவில்லை என்பதை நான் அறிந்தேன்” என்றார்.
ALSO READ: சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகள்.. சிறப்பு சாதனையை படைத்த இந்திய அணி!
அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த முச்சல்:
Palaash Muchhal has officially dismissed fraud allegations by Vidnyan Mane, calling them “baseless and factually incorrect.” Labeling the claims a malicious attempt to tarnish his reputation, Muchhal confirmed he is pursuing legal action against the cricketer’s childhood friend. pic.twitter.com/XC0dCqjWGt
— CineHind (@CineHind) January 24, 2026
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் முச்சால் மறுத்துள்ளார். இதுகுறித்து முச்சல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சங்லியைச் சேர்ந்த விக்யான் மானே சமூக ஊடகங்களில் கூறிய குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, எனக்கு எதிரான இந்தக் கூற்றுக்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை. எனது வழக்கறிஞர் ஷ்ரேயான்ஷ் மிதார் அனைத்து சட்ட குறிப்புகளையும் ஆராய்ந்து வருகிறார், மேலும் இந்த விஷயம் முறையான சட்ட நடைமுறைகள் மூலம் தீர்க்கப்படும்.” என்றார்.
பலாஷ் முச்சலும் ஸ்மிருதி மந்தனாவும் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தனர். திருமணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மந்தனாவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கடைசி நிமிடத்தில் அவர்களின் திருமணம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.