IND vs AUS: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர்.. வெளியான அட்டவணை விவரம்!
India Women vs Australia Women 2026: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கடினமாகவே உள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்கள் இரண்டிலும் சாதனை மோசமானதாகவே உள்ளது. முதலாவதாக ஒருநாள் வடிவத்தில், ஆஸ்திரேலியாவில் விளையாடிய 19 போட்டிகளில் இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் தற்போது நான்காவது மகளிர் பிரீமியர் லீக் (Women’s Premier League) தொடர் நடைபெற்று வருகிறது. இதனால், இந்திய மகளிர் அணியின் அனைத்து வீராங்கனைகளும் இந்த மகளிர் பிரீமியர் லீக்கில் மும்முரமாக விளையாடி வருகின்றனர். இதன் பிறகு, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. 2025ம் ஆண்டு இந்திய அணியின் இந்த சுற்றுப்பயண அட்டவணையை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த போட்டி தொடருக்கான முழு அட்டவணை மற்றும் பிற விவரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பிபிஎல்-ஐ புறக்கணித்த வீரர்கள்.. வங்கதேசத்தில் நிலவும் குழப்பம்.. பதவி விலகுவாரா பிசிபி தலைவர்?
இந்தியா-ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடர்:
இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஒரு டி20 தொடருடன் தொடங்கும். இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதல் டி20 வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி சிட்னியில் நடைபெறும். இரண்டாவது டி20 வருகின்ற 2026 பிப்ரவரி 19ம் தேதி ஹோபார்ட்டில் நடைபெறும். மூன்றாவது போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 21ம் தேதி அடிலெய்டு ஓவலில் நடைபெறும். இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 2026 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கும். முதல் போட்டி பிரிஸ்பேனிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 27ம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெறும். மூன்றாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2026 மார்ச் 1ம் தேதி ஹோபார்ட்டில் நடைபெறும். இறுதியாக, ஒரே பகல்-இரவு டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 மார்ச் 6 முதல் 9 வரை நடைபெறும்.




ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் சாதனை என்ன?
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு கடினமாகவே உள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்கள் இரண்டிலும் சாதனை மோசமானதாகவே உள்ளது. முதலாவதாக ஒருநாள் வடிவத்தில், ஆஸ்திரேலியாவில் விளையாடிய 19 போட்டிகளில் இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், 15 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒரு ஒருநாள் தொடரை கூட வென்றதில்லை. டி20 வடிவத்தில் இந்தியா 12 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்ற நிலையில், ஆஸ்திரேலியா 7 போட்டிகளில் வென்றுள்ளது. இருப்பினும், இந்தியா ஆஸ்திரேலியாவில் ஒரு டி20 தொடரை வென்றுள்ளது, அந்த வெற்றி 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2016ல் கிடைத்தது. அதன்படி, இந்த முறை என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
ALSO READ: பூட்டப்பட்ட சின்னசாமி ஸ்டேடியம்! ஆர்சிபிக்கு இனி எந்த ஸ்டேடியம்..? கிடைத்த முக்கிய அப்டேட்!
அலிசா ஹீலியின் கடைசி தொடர்
இந்தியா-ஆஸ்திரேலியா தொடருடன் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் அலிசா ஹீலியின் கடைசி தொடராக இருக்கும். இந்தத் தொடருக்குப் பிறகு அலிசா ஹீலி ஓய்வு பெறுவார். புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் 35 வயதான அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் 35.98 சராசரியுடன் 3,563 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஏழு சதங்கள் அடங்கும். மேலும், 35 வயதான டி20 போட்டிகளில் 25.45 சராசரியுடன் 3,054 ரன்களையும் எடுத்துள்ளார்.