Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீலகிரி: ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்- சுற்றுலாப்பயணிகள் அச்சம்.. வனத்துறையின் நடவடிக்கை என்ன?

Gudalur Wild Elephants: கூடலூர் மற்றும் முதுமலை கிராமங்களில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக ஊருக்குள் நுழைந்து பயிர்கள் மற்றும் வீடுகளில் சேதம் விளைவிக்கின்றன. பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். வனத்துறையினர் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி: ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்- சுற்றுலாப்பயணிகள் அச்சம்.. வனத்துறையின் நடவடிக்கை என்ன?
காட்டு யானைகள்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Jul 2025 09:42 AM

நீலகிரி ஜூலை 11: நீலகிரி மாவட்டம் (Nilgiris District) கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகள் (Wild elephants) ஊருக்குள் வருவது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் வீடுகள், பயிர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் நடுக்கூடலூரில் மெயின் ரோட்டில் யானை ஊருக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாக்கமூலா பகுதியில் 3 யானைகள் முகாமிட்டு (3 elephant camps in Makamula area), இரவில் கிராமங்களில் பயிர்களை நாசம் செய்கின்றன. குனில்வயலில் யானை வீட்டு ஜன்னல் உடைத்து உணவுக்காக தேடியது. வனத்துறையினர் (Foresters) நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.

கூடலூர் மற்றும் முதுமலை பகுதியில் காட்டு யானைகள் உலா

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் சீரற்ற முறையில் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகின்றன. கடந்த 2 மாதங்களாக மேல் கூடலூர், கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், செம்பாலா, கோத்தர் வயல் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை ஒன்று பகலில் வனப்பகுதியில் ஓய்வு எடுத்து, மாலை நேரத்தில் நகருக்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிடும், பயிர்களை நாசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

மெயின் சாலையில் நடந்து ஊருக்குள் வந்த காட்டு யானை

இதனால் பொதுமக்கள் இரவுப்பொழுதுகளில் வெளியில் செல்ல பயப்படுகின்றனர். சமீபத்தில் நடுக்கூடலூர் குடியிருப்பு பகுதியில் மெயின் சாலையில் காட்டு யானை நடந்து ஊருக்குள் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் ஒளிந்தனர். அதேபோல் மாக்கமூலா பகுதியில் மூன்று காட்டு யானைகள் பகலிலேயே முகாமிட்டு, இரவுக்கு தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், தேன்வயல் பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

2025 ஜூலை 11 அதிகாலை 2.30 மணியளவில் குனில்வயல் பகுதியில் ருக்குமணி என்பவரது வீட்டில் நுழைந்த யானைகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உணவுப் பொருட்கள் தேடி அச்சுறுத்தியுள்ளன. திடீரென சத்தம் போட்ட ருக்குமணியின் விழிப்புடன் யானைகள் அந்த இடத்தை விட்டு சென்றன. பின்னர் மாக்கமூலா பகுதியில் அவை சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: குற்றால சாரல் திருவிழா… எப்போது தொடங்கும்.? வெளியான அறிவிப்பு

உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கார்குடி வனச்சரகர் பாலாஜி, வனவர் தங்கராஜ், வனக்காப்பாளர் வினித் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் அச்சம்

கூடலூரை ஒட்டிய பகுதியில், மெயின் சாலையில் காட்டு யானை ஒன்று நடந்து நேரடியாக ஊருக்குள் நுழைந்தது. இந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. வாகன போக்குவரத்தும் குறுகிய நேரத்துக்கு முடங்கியது.

யானையின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.