2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது. போட்டியில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐசிசி ஒரு காலக்கெடு விதித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு தற்போது பங்களாதேஷ் பதிலளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, இந்தியாவிற்கு பயணம் செய்ய விரும்பவில்லை என பங்களாதேஷ் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.