உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் நிலவும் பெரும் அனிச்சயத்தால், பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சங்களை எட்டியுள்ளன. சமீப நாட்களில் சந்தைகளில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் ஆபத்தான சொத்துக்களை விட்டு விலகி, பாதுகாப்பான சொத்துகளான மதிப்புமிக்க உலோகங்களின் பக்கம் அதிகமாக திரும்பியுள்ளனர்.