ஒவ்வொரு உயிரினத்திலும் தாய் பாசம் வெளிப்படும். அது மனிதராக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், தாய் தன் பிள்ளைக்காக எந்த அபாயத்தையும் எதிர்கொள்ளத் தயங்கமாட்டாள். சமீபத்தில், இப்படியான ஒரு தாய் பாசத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தன் குட்டியை காப்பாற்ற ஹைடென்ஷன் மின்கம்பியின் மீது ஏறி, மரணத்தின் பிடியிலிருந்து அதை மீட்டெடுக்கிறாள். ஹைடென்ஷன் வயரில் சிக்கியிருந்த குரங்கு குட்டியை, அதன் தாய் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.