Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

25 ஆம் தேதி இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil Nadu Weather Alert: கடந்த சில நாட்களாக மழை குறைந்து கடும் பனிப்பொழிவு நிலவும் நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வருகிற ஜனவரி 25, 2026 அன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆம் தேதி இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jan 2026 17:56 PM IST

சென்னை, ஜனவரி 22 : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்து குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழை (Rain)பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக கடலோர பகுதிகளில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனவரி 25, 2026 அன்று தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜனவரி22, 2026 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம். அதனைத் தொடர்ந்து ஜனவரி 23, 2026 அன்று வெள்ளிக்கிழமை அன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பிராட்வே பேருந்து நிலையம் இந்த தேதி முதல் செயல்படாது…பேருந்துகள் மாற்று இடத்தில் இயக்கம்!

அதனைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 24, 2026 அன்று கடலோர பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 25, 2026 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை,  ஜனவரி 22 மற்றும் 23, 2026 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் லேசாக குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாகவோ அல்லது அதைவிட சற்று குறைவாகவோ இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மக்கள் பயன்பாட்டிற்கு வரும் சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. எப்போது முதல்?

மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், ஜனவரி 22 மற்றும் 23, 2026 ஆகிய தேதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.