ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாலும் இயற்கை சூரிய ஒளியில் நேரம் செலவிடுவது, டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தக்கூடும் என ‘செல் மெட்டபாலிசம்’ இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நெதர்லாந்தின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோரிஸ் ஹூக்ஸ் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.