கோயம்புத்தூர், ஜனவரி 22 : காதல் விவகாரத்தில், கோயம்புத்தூர் (Coimbatore) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் 17 வயது மாணவியை, அதே கல்லூரியில் படிக்கும் சக வகுப்பு மாணவன் கத்தியால் குத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றதால், அங்கு இருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி உடனடியாக மீட்கப்பட்டு, அதே தனியார் கல்லூரி குழுமத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக கல்லூரி வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காதல் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவக்கின்றன. குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவன் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : 5 பவுன் நகைக்காக வரதட்சணை கொடுமை…கணவரே ஆபாச படம் எடுத்து மிரட்டல்…இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!




இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகாத்திற்குள் பட்டப்பகலில் மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடரும் மாணவிகளுக்கு எதிரான சம்பவங்கள்
முன்னதாக கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும், நிதி நிறுவன ஊழியரான பிரவீன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே கல்லூரி மாணவி, தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அது பிரவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை நிலவியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!
இந்த நிலையில், மாணவியின் வீட்டிற்குள் நுழைந்த பிரவீன், வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியிருக்கிறார். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் பிரவீன் தப்பியோடினார். மாணவியை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பெற்றோர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.