Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்லூரி மாணவியை முதல் மாடியில் இருந்து தள்ளிவிட்ட நபர்.. காதலை ஏற்க மறுத்ததால் வெறிச்செயல்!

Man Pushed College Student From First Floor | சென்னையில் தனது காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை 27 வயது நபர் ஒருவர் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவியை முதல் மாடியில் இருந்து தள்ளிவிட்ட நபர்.. காதலை ஏற்க மறுத்ததால் வெறிச்செயல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Jan 2026 08:15 AM IST

சென்னை, ஜனவரி 06 : சென்னையில் (Chennai) தனது காதலை ஏற்றுக்கொள்ள மருத்ததன் காரணமாக இரண்டாம் ஆண்டு கல்லூரி படிக்கும் மாணவி, வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது காதலை தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட கல்லூரி மாணவி

நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான இளம் பெண். இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். இந்த இளம் பெண் நெற்குன்றத்தில் தனது குடும்பத்தினருடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த மானவி கல்லூரிக்கு சென்று வரும்போதெல்லாம் அவரிடம் ஒருவர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அது குறித்து மாணவி தனது வீட்டாரிடமும் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு

இந்த நிலையில், ஜனவரி 04, 2026 அன்று இரவு மாணவி மொட்டை மாடியில் காய்ந்துக்கொண்டு இருந்த துணிகளை எடுக்க சென்றுள்ளார். அதனை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த அந்த நபர், வீட்டின் சுவர் ஏறி குதித்து மாணவி வீட்டின் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். அப்போது அவர் துணிகளை எடுத்துக்கொண்டு இருந்த மாணவியை கீழே தள்ளியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறை

இந்த விவகாரம் குறித்து அந்த பகுதி மக்கள் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் 27 வயது சிலம்பரசன் என்பதும் அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : நீலகிரியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி மரணம் – வனத்துறை அறிவிப்பு – காரணம் என்ன?

அந்த நபர் மாணவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த வீட்டிற்கு அருகே வசித்து வந்துள்ளார். பிறகு மாணவி தனது குடும்பத்துடன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்ட நிலையில், அங்கேயும் வந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அந்த நபர் மாணவியை கீழே தள்ளிவிட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.