உலகளாவிய தொழில்நுட்பத் துறை தற்போது கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. பெரிய நிறுவனங்களில் பணிநீக்கம் தொடரும் நிலையில், வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால் பலர் தங்களின் தொழில் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவில் சில இந்தியர்கள், குறிப்பாக ஐடி வல்லுநர்கள், வாழ்வாதாரத்திற்காக வழக்கத்திற்கு மாறான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.