Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chikungunya Prevention Tips: அதிவேகமாக பரவும் சிக்குன் குனியா.. வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

Prevention of Chikungunya Virus Disease: சிக்குன் குனியா (Chikungunya) ஒரு வைரஸ் நோயாகும். ஒருவருக்கு இந்த நோய் இருந்தால், அந்த நபரை கடிக்கும் கொசுக்கள் வைரஸை மற்றவர்களுக்கு பரப்பக்கூடும். எனவே, குடும்பத்தில் ஒருவருக்கு இந்த காய்ச்சல் இருந்தாலும் கூட, முழு குடும்பத்திற்கும் ஒரு சுகாதார எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்.

Chikungunya Prevention Tips: அதிவேகமாக பரவும் சிக்குன் குனியா.. வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
சிக்கன் குனியா தடுப்பு நடவடிக்கைகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jan 2026 18:35 PM IST

பருவ மாற்றம் (Climate Change) ஏற்பட்டவுடன், கொசுக்களால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சமீபகாலமாக, தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பருவ மாற்றத்தின்போது ஏற்படும் நீர் தேங்குதல் மற்றும் அசுத்தம் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழலை உருவாக்குகின்றன. இதன்விளைவாக டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன் குனியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரிக்கிறது. இதில், சிக்குன் குனியா (Chikungunya) ஒரு வைரஸ் நோயாகும். ஒருவருக்கு இந்த நோய் இருந்தால், அந்த நபரை கடிக்கும் கொசுக்கள் வைரஸை மற்றவர்களுக்கு பரப்பக்கூடும். எனவே, குடும்பத்தில் ஒருவருக்கு இந்த காய்ச்சல் இருந்தாலும் கூட, முழு குடும்பத்திற்கும் ஒரு சுகாதார எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். அந்தவகையில், சிக்கன் குனியா வராமல் இருக்க என்ன செய்யலாம்..? சிக்கன் குனியா வந்தால் என்ன வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிக்கிறீர்களா..? உடலில் இந்த பிரச்சனைகள் வரலாம்..!

சிக்கன் குனியா வராமல் இருக்க என்ன செய்யலாம்..?

  1. உங்கள் கை மற்றும் கால்களில் கொசுக்கள் கடிக்காமல் இருக்க முழு கை சட்டைகள் மற்றும் பேன்ட்களை அணிவது நல்லது. உங்களுக்கு இன்னும் பாதுகாப்பு வேண்டுமெனில், மாலை நேரங்களில் முழு கை சட்டைகளை அணிந்து, கையுறைகளையும் அணியலாம். மேலும், உங்கள் நீண்ட பேண்ட் அணிந்து, கால்களில் அணியும் சாக்ஸூக்குள் சொருகி கொள்ளலாம்.
  2. கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, மாலையில் கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம். இவை கடைகளில் எளிதாகக் கிடைக்கும். அந்தி சாயும் முன் உங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிவிடுவது நல்லது. வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வாசனையால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு, தரமான கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்.
  3.  DEET கொண்ட கொசு விரட்டி கிரீம்கள் அல்லது ஸ்ப்ரேக்களை உங்கள் சருமத்தில் தடவவும்.
  4. உங்கள் பகுதியில் கொசுக்கள் அதிகமாக இருந்தால், இரவில் தூங்க செல்வதற்கு முன் கொசு வலையைப் பயன்படுத்தலாம். இது நீங்கள் தூங்கும் போது கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
  5. உங்கள் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் தண்ணீர் குளிர்விப்பான் மற்றும் தண்ணீர் தொட்டியை தவறாமல் சுத்தம் செய்வது நல்லது. உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள வடிகால்களை சுத்தம் செய்யுங்கள். இந்த கொசுக்கள் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.

சிக்கன் குனியா வந்தால் என்ன வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளலாம்..?

எப்சம் உப்பு:

எப்சம் உப்பு பொதுவாக குளியல் உப்பு என்று அழைக்கப்படுகிறது. வேதியியல் உலகில், இது மெக்னீசியம் சல்பேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் உங்கள் கால்களை ஊற வைத்து உட்கார வைப்பது அல்லது உடலில் ஒரு குளியல் எடுப்பது, வீக்கம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கும் திறன் கொண்டிருப்பதால் இதமான உணர்வை தரும்.

மஞ்சள்:

மஞ்சள் பல நோய்களுக்கு ஒரு அருமருந்து. மஞ்சள் சிக்குன்குனியாவிற்கு மிகவும் நன்மை பயக்கும். இது வலியைக் குறைத்து, மூட்டு வீக்கத்தைத் தணிக்கிறது.

ALSO READ: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சிக்குன் குனியா.. இதன் அறிகுறிகள் என்ன..?

இளநீர் அருந்துதல்:

சிக்குன்குனியா நோயாளிகளுக்கு இளநீர் கொடுக்க வேண்டும். இது உடலை நீரேற்றமாக வைத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சிக்குன் குனியா வைரஸ் பொதுவாக முழு உடலையும் பாதித்து, கல்லீரலை கடுமையாக பாதிக்க செய்யும். இளநீர் குடிப்பது கல்லீரல் பாதிப்பைத் தடுத்து, மீட்பு விகிதத்தை அதிகரிக்கிறது.

துளசி இலைகள்:

காய்ச்சலைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், விரைவாக குணமடையவும் துளசி இலைகளைக் கொடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் 3 அல்லது 4 இலைகளைக் கொடுத்து, நோயாளி அவற்றை மெல்லச் சொல்லுங்கள். இதை ஒரு நாளைக்கு 2 முறை செய்யுங்கள். அப்படி இல்லையெனில், நோயாளிக்கு ஒரு துளசி கஷாயம் கொடுக்கலாம்.

தேன் மற்றும் சூரியகாந்தி விதைகள்:

சூரியகாந்தி விதைப் பொடியை தேனுடன் கலந்து உட்கொள்ளுங்கள். இது மூட்டு வலியைப் போக்கவும், விரைவான மீட்சியை ஊக்குவிக்கவும் உதவும். சூரியகாந்தி விதைகள் துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை வழங்குகின்றன. அதே நேரத்தில், தேன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.