Health Tips: குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிக்கிறீர்களா..? உடலில் இந்த பிரச்சனைகள் வரலாம்..!
Drinking Less Water in Winter: சிறுநீரகக் கற்களின் அறிகுறிகளில் கீழ் முதுகு அல்லது வயிற்றில் கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், இரத்த சிறுநீர், குமட்டல் அல்லது வாந்தி ஆகியவை அடங்கும். UTIகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கெட்ட அல்லது அடர் நிற சிறுநீர் மற்றும் காய்ச்சலையும் ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் (Winter) தாகம் குறைவாக எடுக்கும் என்பதால், பலரும் நாள்தோறும் குறைந்த அளவிலான தண்ணீரை எடுத்து கொள்கிறார்கள். குளிர்காலத்தில் வியர்வை குறைவாக வெளியேறும் என்பதால், உடல் தண்ணீரின் தேவையை உணராது. இது தாகம் எடுப்பதை குறைக்கிறது. இருப்பினும், இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். போதுமான அளவு தண்ணீர் (Drinking Water) குடிக்காமல் இருப்பது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. இது நாளடைவில் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் மண்டலத்தை நேரடியாக பாதிக்க தொடங்கி, சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதை தொற்று (UTI) உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் குறைவாக தண்ணீர் குடிப்பது ஏன் சிறுநீரக கற்கள் மற்றும் UTI களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: உங்கள் உணவு பட்டியலில் இந்த உணவுகள் போதும்.. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்!
தண்ணீர் குடிப்பதன் அவசியம் என்ன..?
உடலில் போதுமான நீர் இல்லாதபோது, சிறுநீர் குவிந்துவிடும். அடர்த்தியான சிறுநீரில் உள்ள தாதுக்கள் எளிதில் வெளியேற்றப்படாது. இதனால், சிறுநீரக கற்கள் உருவாகும். கூடுதலாக, குறைவாக சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்கள் உருவாகி, யுடிஐ அபாயத்தை அதிகரிக்கும். குளிர்காலத்தில், குளிர் காரணமாக மக்கள் குறைவாகவே சிறுநீரை வெளியேற்றுகிறார்கள். இது இந்தப் பிரச்சினையை இன்னும் மோசமாக்குகிறது. நீடித்த நீரிழப்பு சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது உடலில் நச்சுகளை உருவாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது.




அறிகுறிகள் என்ன?
சிறுநீரகக் கற்களின் அறிகுறிகளில் கீழ் முதுகு அல்லது வயிற்றில் கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், இரத்த சிறுநீர், குமட்டல் அல்லது வாந்தி ஆகியவை அடங்கும். UTIகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கெட்ட அல்லது அடர் நிற சிறுநீர் மற்றும் காய்ச்சலையும் ஏற்படுத்தும்.
பெண்கள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஏற்கனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். குளிர்காலத்தில் குறைவாக தண்ணீர் குடிப்பவர்களும் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம்.
ALSO READ: சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் இந்த தவறை செய்யக்கூடாது! ஏன் தெரியுமா?
உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது..?
- நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்கவும்.
- தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சூடான நீரைக் குடிப்பது உதவியாக இருக்கும்.
- பலரும் நீண்ட நேரம் அடக்கி வைத்து சிறுநீரை வெளியேற்றுகிறார்கள். அவ்வாறு சிறுநீரை அடக்குவதைத் தவிர்க்கவும்.
- உங்கள் உணவில் சூப்கள் மற்றும் திரவங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- அதிகமாக தேநீர் மற்றும் காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.
- சிறுநீரின் நிறம் அடர் நிறமாக வெளியேறினால், உடலில் நீரிழப்பு இருப்பதை குறிக்கலாம்.
- உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைகளைத் தொடரவும்.