AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sigma: கேத்ரின் தெரசா சிறப்பு நடனமாடும்.. சிக்மா படத்தின் 4வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Sigma Movie 4th Single: இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் முதல் முறையாக உருவாகியுள்ள திரைப்படம்தான் சிக்மா. இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், கேத்ரின் தெரிசா நடனமாடும் புதிய பாடல் ரிலீஸ் எப்போது என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sigma: கேத்ரின் தெரசா சிறப்பு நடனமாடும்.. சிக்மா படத்தின் 4வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சிக்மா திரைப்பட சுலோச்சனா பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Sep 2026 20:08 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நயாகனாக இருந்து, தற்போது தமிழக அரசியலில் முதல்வராக இருந்துவருபவர் விஜய் (CM Vijay). இவரின் மூத்தமகனாக இருந்து, தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்திருப்பவர் ஜேசன் சஞ்சய் (Jeson Sanjay). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக உருவாகியுள்ள திரைப்படம்தான் சிக்மா (Sigma). இந்த திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன், எமோஷனல் மற்றும் பணக் கொள்ளை போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது பிரம்மாண்டமாக இயக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இப்படத்தின் 4வது பாடல் சுலோச்சனா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிக் பாஸில் தலைவர் எக்சிட் லிஸ்ட்.. இந்தவாரம் வெளியேற்றப்படுபவர் இவரா?

சிக்மா படத்தில் சிறப்பு நடனமாடும் கேத்ரின் தெரிசா:

இந்த படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இதில் தமிழ் நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த விதத்தில் தென்னிந்திய பிரபல நடிகை கேத்ரின் தெரசா இதில் சிறப்பு நடனமாடியுள்ளார். சுலோச்சனா என்ற இப்பாடலில் கேத்ரின் தெரசா நடனமாடும் நிலையில், அவருடன் ஜேசன் சஞ்சயும் இப்பாடலில் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

சிக்மா படத்தின் 4வது படத்தின் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியுள்ள எக்ஸ் பதிவு:

இந்த சிக்மா படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படமாக உள்ளது. இதில் ஜேசன் சஞ்சயும் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படம் மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us