AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nivin Pauly: பென்ஸ் படத்தின் நிலை என்ன? அப்டேட் கொடுத்த நிவின் பாலி!

Nivin Paulys Benz Movie Update: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்தான் பென்ஸ். இப்படத்தின் ஷூட்டிங் நிலை குறித்து நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக காணலாம்.

Nivin Pauly: பென்ஸ் படத்தின் நிலை என்ன? அப்டேட் கொடுத்த நிவின் பாலி!
நிவின் பாலிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Sep 2026 19:38 PM IST

மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. தமிழில் இவரின் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai). இந்த படத்தை இயக்குநர் ராம் (Director Ram) இயக்க, மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் நிவின் பாலி (Nivin Pauly), சூரி (Soori) மற்றும் அஞ்சலி (Anjali) போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ராமின் இயக்கத்தில் இந்த திரைப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது அதீத எதிர்பார்ப்புகள் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது.

இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்த நிலையில், அதில் இயக்குநர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மற்றும் பல்வேறு பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகர் நிவின் பாலி, தமிழில் தான் வில்லனாக நடிக்கும் பென்ஸ் படத்தின் நிலை குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: டோரத்தி படம் எப்படி இருக்கும்? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்

பென்ஸ் படத்தின் நிலை குறித்து பேசிய நடிகர் நிவின் பாலி:

ஏழு கடல் ஏழு மலை பட ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நிவின் பாலி அதில், “இப்போது நான் தமிழில் பென்ஸ் என்ற படம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இதை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்திற்கு இன்னும் 2 ஷெட்யூல் இருக்கிறது, அதாவது 30 முதல் 35 நாட்கள் ஷூட்டிங் இன்னும் இருக்கிறது. மேலும் புதிய படத்திற்கான கதைகளையும் கேட்டுவருகிறேன், செட் ஆகியது என்றால் பண்ணலாம்” என அதில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஜேசன்… திணறிய எதிரணி தலைவர் ராகவ் – வைரலாகும் வீடியோ!

ஏழு கடல் ஏழு மலை படத்தின் ட்ரெய்லர் குறித்து நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஏழு கடல் ஏழு மலை படமானது வித்தியாசமான பேண்டஸி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரயிலில் நடக்கும் நாடகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலிக்கு இணையான வேடத்தில் நடிகர் சூரியும் நடித்துள்ளார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us