AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக் பாஸ் தி காமன் மேன் ஷோ இப்படித்தான் இருக்கும் – ராஜு ஜெயமோகன்!

Raju Jayamohan About Bigg Boss The Common Man Show: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 ஆரம்பமாக தயாராகிவரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் - தி காமன் மேன் என்ற புது ஷோ நடைபெறுகிறது. அது எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தி காமன் மேன் ஷோ இப்படித்தான் இருக்கும் – ராஜு ஜெயமோகன்!
பிக் பாஸ் தி காமன் மேன் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Aug 2026 16:42 PM IST

சின்னத்திரை மற்றும் விஜய் டிவி (Vijay Tv) ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் இதுவரை மொத்தமாக 9 சீசன்கள் வெளியாகியிருக்கிறது. இதில் இறுதியாக வெளியான பிக் பாஸ் சீசன் 9ன் வெற்றியாளராக திவ்யா கணேஷ் (Divya Ganesh) கோப்பையை வென்றிருந்தார். இந்த வெற்றிக்கு பின் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளோ வரவேற்புகளோ கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்த நிகழ்ச்சிக்கு முன் சாதாரணமான மக்களை தேர்ந்தெடுக்கும் விதமாக பிக் பாஸ் – தி காமன் மேன் (Bigg Boss – The Common Man) என்ற புது நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனா, ஓவியா (Oviya) மற்றும் ராஜு ஜெயமோகன் (Raju Jayamohan) போன்றவர்கள் நடுவர்களாக இருக்கிறார்களாம்.

மேலும் மாயா கிருஷ்ணன் இதன் தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து, பிக் பாஸ் தி காமன் மேன் நடுவர் ராஜு ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தர்மன் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – ராஷி கண்ணா!

பிக் பாஸ் தி காமன் மேன் ஷோ குறித்து ராஜு ராஜ்மோகன் சொன்ன விஷயம்:

ராஜு ஜெயமோகன், “பிக் பாஸ் எனக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் என்னவென்றால், நீங்களாகவே இருப்பது போதுமானது என்பதுதான். மக்களைக் கவர நீங்கள் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டியதில்லை. இந்த பிக் பாஸ் தி காமென் மேன் நிகழ்ச்சி மிகவும் உற்சாகமானது, ஏனென்றால் இது போன்ற ஒரு வாய்ப்புக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்து, தங்களை நிரூபிக்க ஆர்வமாக இருக்கும் நபர்களை நாம் சந்திக்கிறோம்.

இதையும் படிங்க: விவாகரத்து செய்கிறாரா கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி? அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தங்களின் தனித்துவத்தால் பார்வையாளர்களை மகிழ்வித்து, அவர்களுடன் ஒன்றிணைந்து, தங்கள் பயணத்தின் மூலம் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போட்டியாளர்களைக் கண்டறிவதுதான் எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது என அதில் அவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி குறித்து வெளியான புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Follow Us