இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நான் வரம் கேட்பேன் – வைரலாகும் சூரியின் தீபாவளி கொண்டட்ட வீடியோ
Actor Soori: நடிகர் சூரி நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் குடும்பத்தினருடன் நடிகர் சூரி சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி (Actor Soori). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் சூரி நாயகனாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மாமன். மாமன் மற்றும் மருமகனின் பாசப் போராட்டம் குறித்து இந்தப் படம் பேசியிருக்கும். பக்கா ஃபேமிலி எண்டர்டெய்மெண்ட் பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் நடிகர் சூரி நாயகனாக நடிக்க தொடங்கியதில் இருந்து மிகவும் ஜாலியான கதையில் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து நடிகர் சூரி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக தற்போது மண்டாட்டி படத்தில் நடிகர் சூரி விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் ஒரு மீனவராக நடிகர் சூரி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.




குடும்பத்தினருடன் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடிய நடிகர் சூரி:
நடிகர் சூரி குடும்பத்தினர் குறித்து அவர் பலப் பேட்டிகளில் தொடர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் ஒரு யூடிபிற்கு அளித்தப் பேட்டியில் அவரது குடும்பத்தினருடன் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் சூரி தனது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருடம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
குடும்பத்தினருடன் இணைந்து டான்ஸ் ஆடியது, பட்டாசு வெடிப்பது, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என மகிழ்ச்சியாக தது தீபாவளி பண்டிகையை சூரி கொண்டாடி உள்ளார். இந்த தீபாவளி கொண்டாட்ட வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் சூரி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி🙏💝 pic.twitter.com/WtrQe4QL3D
— Actor Soori (@sooriofficial) October 21, 2025
Also Read… நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்