Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

U19AsiaCup : 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி – என்ன நடந்தது?

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது, இந்த நிலையில் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி படுதோல்வி அடைந்தது.

U19AsiaCup : 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி – என்ன நடந்தது?
90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Dec 2025 19:28 PM IST

19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி,  பாகிஸ்தானை (Pakistan) 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் இலக்கை அடைய முடியாமல் படுதோல்வி அடைந்தது.  இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூரியவன்ஷி 5 ரன்கள் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். அதனைத் தொடர்ந்து கேப்டன் ஆயுஷ் மத்ரே 38 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.  ஆனால் அதன் பிறகு, பாகிஸ்தானை தோற்கடிப்பதில் மூன்று இந்திய வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்ற 3 வீரர்கள்

பேட்ஸ்மேன் ஆரோன் ஜார்ஜ், ஆல்ரவுண்டர் கனிஷ்க் சவுகான், மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தனர். இந்த போட்டியில் ஆரோன் ஜார்ஜ் 88 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.  அவரைத் தொடர்ந்து கனிஷ்க் சவுகானும் 46 ரன்கள் எடுத்துதுடன் பாகிஸ்தான் அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் வெறும் 16 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க : IPL 2026 Auction: தெறிக்கப்போகும் ஐபிஎல் மினி ஏலம்.. அணிகள் வாங்க மறுக்கப்போகும் 5 வீரர்கள்..!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், நான்காவது ஓவரில் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி ஒரு பவுண்டரிக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு, ஆரோன் ஜார்ஜ், கேப்டன் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து, சிறந்த பேட்டிங்கின் மூலம் பாகிஸ்தான் பந்து வீச்சை ஆரோன் ஜார்ஜ் சிறந்த ஃபார்மில் இருந்தார், ஆயுஷ் மத்ரே மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். அவர் 3 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடித்து 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் விஹான் மல்ஹோத்ரா 12 ரன்களிலும், வேதாந்த் திவாரி வெறும் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் ஆரோன் ஜார்ஜ் தொடர்ந்து களமிறங்கி  சிறப்பான அரைசதம் அடித்தார்.

இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் கனிஷ்க் சவுஹான் 46 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் வெறும் 4 ரன்களில் அரை சதத்தை தவறிவிட்டார். அதே போல சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் ஜார்ஜும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பாகிஸ்தானை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சயாம் மற்றும் அப்துல் சுபான் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதனால் இந்திய அணியால்  240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அசத்திய இந்திய பந்துவீச்சாளர்கள்

பாகிஸ்தானை 240 ரன்களுக்குள் சுருட்ட இந்திய அணிக்கு சிறந்த பந்துவீச்சு தேவைப்பட்டது. அதற்கேற்ப பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக தீபேஷ் தேவேந்திரன்  இந்திய அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடந்த போட்டியில் அபார சதம் அடித்த சமீர் மன்ஹாஸை ஒன்பது ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் அலி ஹசன் பலோச்சின் விக்கெட்டையும் அவர் எடுத்த அவர், அகமது ஹுசைனையும் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் கனிஷ்க் சவுகான் உஸ்மான் கானை ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தானை முழுமையாக கட்டுப்படுத்தினார்.

இதையும் படிக்க : Vaibhav Suryavanshi: ஆசியக் கோப்பையில் அசத்தலான ஆட்டம்.. 171 ரன்கள் குவித்து சம்பவம் செய்த சூர்யவன்ஷி!

இந்த நிலையில், திபேஷின் தாக்குதலில் இருந்து மீண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபர்ஹான் யூசுப் மற்றும் ஹுசைஃபா எஹ்சான் ஆகியோர் நடு ஓவர்களில் ஒரு வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அவர்  தனது தரமான பந்துவீச்சின் மூலம், ஃபர்ஹான் யூசுப்பை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர்  ஹுசைஃபா எஹ்சானை 70 ரன்களுக்கு இந்தியாவின் கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் பாகிஸ்தான் 41.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு விரைவாக ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.