AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்போ அரசன் படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரி முத்து உடன் கூட்டணி இல்லையா சிம்பு? வைரலாகும் தகவல்

Silambarasan next film after Arasan is with director Keerthiswaran | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் அரசன் படத்தை முடித்த பிறகு இயக்குநர் கீர்த்தீஸ்வரன் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்போ அரசன் படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரி முத்து உடன் கூட்டணி இல்லையா சிம்பு? வைரலாகும் தகவல்
சிலம்பரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 May 2026 17:58 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக நடித்த போது ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்ற நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு உலகம் முழுவதும் தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட சிம்புவின் ரசிகர்களை பார்த்து அனைவரும் பொறாமைப்படுவார்கள். பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வெளிப்படையாகவே அதனைத் தெரிவித்து உள்ளனர். அதற்கு காரணம் நடிகர் சிம்புவின் படம் திரையரங்குகளில் வெளியானாலும், ஆகவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் என்றைக்குமே அவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதுதான். இது சிலம்பரசன் சினிமாவில் தோல்வியை சந்தித்துக்கொண்டு இருந்த காலத்தில் அவரது ரசிகர்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக சொல்லப்பட்ட ஒன்று.

இதன் காரணமாகவே தனது ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு கம்பேக்கை கொடுத்தார் நடிகர் சிலம்பரசன். அதன்படி நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அரசன். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெற்றிமாறனை தொடர்ந்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன் உடன் கூட்டணி வைக்கும் சிம்பு?

நடிகர் சிலம்பரசன், தனது அரசன் படத்திற்குப் பிறகு, டியூட் படத்தின் இயக்குனர் கீர்த்திஸ்வரனுடன் இணைகிறார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. மேலும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஹைதராபாத்தில் 20 நாட்களுக்குக் கதை விவாதம் நடைபெற்றது என்றும் தற்போது சென்னை, மாமல்லபுரத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் சிம்பு தற்போது கீர்த்தீஸ்வரன் கூட்டணி வைத்துள்ளார் என்று செய்திகள் பரவி வருகின்றது.

Also Read… தமிழ் நாட்டில் மட்டும் 10 நாட்களில் கருப்பு படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? அப்டேட் கொடுத்த படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது கர படக்குழு… எங்கு எப்போது தெரியுமா?

Follow Us