வெற்றிகரமாக 2வது வாரத்தில்.. புது போஸ்டரை பகிர்ந்த ஜன நாயகன் படக்குழு!
Jana Nayagan Movie special poster: 2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படமானது சினிமாவில், தமிழக முதல்வர் இறுதியாக நடித்திருந்த திரைப்படமாகும். இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், 2வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இயக்குநர் எச். வினோத் (H Vinoth) இயக்கத்த்தில், தமிழக முதல்வர் விஜய் சினிமாவில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகிவந்த இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் முதல்வர் விஜய் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் கயல் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். மேலும் இதில் விஜய்யின் அண்ணன் மகளாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது பெண்ணிய பாதுகாப்பு மாற்று அதிரடி ஆக்ஷன் அரசியல் கதைக்களத்தில் முழுவதுமாக உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படமானது வெளியாகி 2வது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. ஜன நாயகன் திரைப்படமானது திரையரங்குகளில் தற்போதுவரை ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெளியாகிவரும் நிலையில், தற்போது படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: இது ராமயுகத்தின் உதயம்… அதிகாலையிலேயே வெளியானது ராமாயணா படத்தின் ட்ரெய்லர்
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் தொடர்பான எக்ஸ் பதிவு:
Successfully entering 2nd week 🔥#JanaNayagan #JanaNayakudu#JanNeta
The Hon’ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries pic.twitter.com/XmgXUWmpNn
— KVN Productions (@KvnProductions) July 30, 2026
தமிழக முதல்வர் விஜய் இந்த ஜன நாயகன் படத்தில் தளபதி வெற்றிக் கொண்டான் ஐபிஎஸ் என்ற வேடத்தில் நடித்திருந்தார். அவருடன் மமிதா பைஜூ “விஜயலட்சுமி” என்ற வேடத்திலும் நடிகை பூஜா ஹெக்டே “கயல்” என்ற வேடத்திலும் நடித்திருந்தனர். இந்த படமானது 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், முதல் நாளிலே உலகமெங்கும் சுமார் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தியிருந்தது. இப்படம் ஏற்கனவே முழுவதும் இணையத்தில் லீக்காகியிருந்த நிலையில், ஆனாலும் பீக் குறையாமல் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவே அமைந்துவிட்டது.
இதையும் படிங்க: கேரளாவில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது:
இப்படம் இணையத்தில் லீக்காகுவதற்கு முன் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி இதன் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை பெற்றிருந்தது. பின் இப்படம் இணையத்தில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கேன்சல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது இதன் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாம். கிட்டத்தட்ட ரூ 60 கோடி கொடுத்து ஜன நாயகன் பட ரிலீஸ் உரிமையை பெற்றிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இது ஆகஸ்ட் 2வது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.