கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு – தீவிரமடையும் காவிரி பிரச்னை
தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிப்பு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையில் மேகதாது அணை விவகாரம் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னையை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. இந்த நிலையில் மேகதாது குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




இதையும் படிக்க : விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..
#TamilNadu @CMOTamilnadu @actorvijay‘s film Jana Nayagan poster defaced by members of pro #Kannada organisation Vijay Sene demanding that CM Vijay’s Jana Nayagan not be screened in #Mandya #Karnataka over #cauvery water issue. pic.twitter.com/DqrQuzsYZB
— Imran Khan (@KeypadGuerilla) July 30, 2026
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும். மழை பற்றாக்குறை காரணமாக அணைகளில் உள்ள நீர் இருப்பின் அளவுக்கு ஏற்றவாறு நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3500 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையும் படிக்க : தொழில்துறையில் மாபெரும் பாய்ச்சல்.. முதல்வர் விஜய் முன்னிலையில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
இந்த நிலையில் கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தியேட்டர் முன் இருந்த ஜனநாயகன் பட போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் வருகிற ஆகஸ்ட் 3, 2026 அன்று முதல்வர் விஜய் கர்நாடகா சென்று முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து காவிரி நீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.