AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

PM Modi Birthday: தொடர் வெற்றிகள் முதல் உலகளாவிய கௌரவம் வரை.. பிரதமர் மோடியின் சாதனைப் பாதை!

PM Modi Birthday Special: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2001-இல் குஜராத் முதல்வராகத் தொடங்கி, தொடர்ந்து 3 முறை பிரதமராகப் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ள நரேந்திர மோடியின் வாழ்நாளில் இடம்பெற்ற 5 மிக முக்கிய வரலாற்று சாதனைகள் மற்றும் சாதனைகளின் தொகுப்பு இதோ!

PM Modi Birthday: தொடர் வெற்றிகள் முதல் உலகளாவிய கௌரவம் வரை.. பிரதமர் மோடியின் சாதனைப் பாதை!
பிரதமர் மோடி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 17 Sep 2026 07:48 AM IST

செப்டம்பர், 17: இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராகவும், உலக அளவில் சக்திவாய்ந்த உலகத் தலைவர்களில் ஒருவராகவும் திகழும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17 அன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு நன்னாளை முன்னிட்டு டெல்லி உட்படப் பல்வேறு மாநிலங்களில் சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, கல்வி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ சார்பில் சேவை உறுதிமொழி இயக்கம் நடத்தப்படுகிறது. மேலும் டெல்லி கர்தவ்ய பாதையில் சவா லாக் (1.25 லட்சம்) தீபங்கள் ஏற்றி அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றி, அதன்பின் 2014 முதல் நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து சேவை செய்து வரும் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்வில் பதிந்துள்ள 5 பிரம்மாண்ட சாதனைகள் மற்றும் மைல்கற்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மேலும் படிக்க: ஒவ்வொரு பள்ளியும் முன்மாதிரிப் பள்ளி.. இந்தியாவின் எதிர்காலத்திற்குத் தயாராகும் PM SHRI கல்வி திட்டம்

அதிக நாட்கள் ஆட்சி செய்த பிரதமர்:

இந்திய அரசியல் வரலாற்றில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிக நாட்கள் பிரதமராகப் பொறுப்பில் இருந்தவர் என்ற வரலாற்றுப் பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். தொடர்ந்து 4,399 நாட்கள் நாட்டின் பிரதமராகப் பணியாற்றி, பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் என்ற நீண்டகால சாதனையை நரேந்திர மோடி முறியடித்துள்ளார். இதன் மூலம் இந்திய ஜனநாயக வரலாற்றில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களில் அதிக காலம் தொடர்ந்து ஆட்சி அமைத்த முதன்மைப் பிரதமராகத் திகழ்கிறார்.

அரசுத் தலைவராக கால் நூற்றாண்டு சேவை:

அரசியல் நிர்வாகத்தில் அரசுத் தலைவராக மிக நீண்ட காலம் பணியாற்றிய அரிதான பெருமை நரேந்திர மோடிக்கு உண்டு. கடந்த 2001 அக்டோபர் 7 அன்று முதன்முறையாக குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 2014 வரை தொடர்ச்சியாக அம்மாநிலத்தை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து 2014 முதல் தற்போது வரை இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் சேர்த்து சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு நிர்வாகத் தலைவராகச் சேவை செய்து சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து 3 முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி:

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது கட்சி மற்றும் கூட்டணியை முன்னின்று நடத்திப் பெரும் வெற்றிக்கு வழிவகுத்தவர் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து 2019 மற்றும் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் தனது தலைமையின்கீழ் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்திய அரசைக் கட்டமைத்துள்ளார். சுதந்திர இந்தியாவில் பண்டிட் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3 முறை மக்களவைத் தேர்தலில் வென்று பிரதமராகப் பொறுப்பேற்ற ஒரே தலைவர் நரேந்திர மோடி மட்டுமே.

குஜராத் மாநிலத்தில் அதிக காலம் முதலமைச்சர் பதவி:

அக்டோபர் 2001 முதல் மே 2014 வரை தொடர்ச்சியாகப் பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி நீடித்தார். இவருடைய தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அடுத்தடுத்துப் அமோக வெற்றி பெற்றது. குஜராத் மாநிலத்தின் வரலாற்றிலேயே அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.

மேலும் படிக்க: ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு!

வெளிநாடுகளின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகள்:

உலக நாடுகளுடனான இந்திய உறவுகளை வலுப்படுத்தியதில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அவரது சிறப்பான வெளியுறவுக் கொள்கைகளைப் பாராட்டும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மிகயுயர்ந்த சர்வதேச விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் சியோல் அமைதிப் பரிசு, பிலிப் கோட்லர் தலைவர் விருது, ஐநாவின் ‘சேம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருது மற்றும் ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, எகிப்து போன்ற நாடுகளின் உயரிய தேசிய சிவிலியன் விருதுகளும் அடங்கும். இந்தியப் பிரதமர் ஒருவர் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விருதுகளைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

Follow Us