Team India: பயிற்சியாளர் குழுவில் விடைபெற்ற டி திலீப்.. உணர்ச்சி வசப்பட்ட ரோஹித் சர்மா!
Rohit Sharma's Heartfelt Tribute to T Dilip: டி. திலீப் முதன்முதலில் 2021-ஆம் ஆண்டில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில்தான் ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அப்போது, ஆர். ஸ்ரீதருக்குப் பதிலாக டி. திலீப் நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியின் (Indian Cricket Team) பயிற்சி குழுவில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலம் முதல் தற்போது வரை ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி திலீப்பின் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இந்த முறை பிசிசிஐ அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை, மாறாக சுப்தீப் கோஷை (Subhadeep Ghosh) புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் உலகக் கோப்பை வென்ற கேப்டனான ரோஹித் ஷர்மா, இந்த மாற்றம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ‘தி ஹிட்மேன்’ என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா, டி திலீப் பற்றி மிகவும் அருமையான சில வரிகளை குறிப்பிட்டுள்ளார். ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டி. திலீப்புடன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அந்தப் புகைப்படத்திற்கு அவர், “திலீப் குரு, நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் குழுவில் மாயாஜாலத்தை நிகழ்த்தி, திரைக்குப் பின்னால் கடினமாக உழைத்தீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்” என்று தலைப்பிட்டிருந்தார்.
ஆALSO READ: சர்வதேச போட்டியில் விளையாடியது கிடையாது.. இந்திய பயிற்சியாளராக நியமனம்.. சுப்தீப் கோஷ் கடந்து வந்த பாதை!




5 ஆண்டுகளுக்குப் பொறுப்பு
ROHIT SHARMA’S BEAUTIFUL INSTAGRAM STORY FOR T DILIP. ❤️🥹 pic.twitter.com/Lb8uKqAijr
— Tanuj (@ImTanujSingh) August 3, 2026
டி. திலீப் முதன்முதலில் 2021-ஆம் ஆண்டில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில்தான் ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அப்போது, ஆர். ஸ்ரீதருக்குப் பதிலாக டி. திலீப் நியமிக்கப்பட்டார். தற்போது அவரது பதவிக்காலம் 2026-ஆம் ஆண்டில் முடிவடைகிறது.
புதிய பீல்டிங் பயிற்சியாளர் சுப்தீப் கோஷ் யார்?
இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளரான சுப்தீப் கோஷ், இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியது கிடையாது. இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், சுப்தீப் கோஷ் அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, 17 முதல் தர மற்றும் 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 25 முதல் தர இன்னிங்ஸ்களில் 316 ரன்களையும், 17 லிஸ்ட் ஏ இன்னிங்ஸ்களில் 307 ரன்களையும் எடுத்துள்ளார். மொத்தமாக, சுப்தீப் கோஷ் 2 வடிவங்களிலும் தலா 2 அரை சதங்களை அடித்துள்ளார்.
ALSO READ: இலங்கை சுற்றுப்பயணம்.. பும்ராவிற்கு பதிலாக இந்த ரஞ்சி நட்சத்திரத்திற்கு வாய்ப்பு..!
ஒரு வீரராக கிரிக்கெட்டில் சுப்தீப் கோஷ் பிரபலம் இல்லையென்றாலும், கடந்த 15 ஆண்டுகளாக, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்கள் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார். ஐபிஎல்லில் சுப்தீப் கோஷ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 2024-ல், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கோஷ் பயிற்சி அளித்தார். மேலும், அவர் வேறு பல இடங்களிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.