AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: சர்வதேச போட்டியில் விளையாடியது கிடையாது.. இந்திய பயிற்சியாளராக நியமனம்.. சுப்தீப் கோஷ் கடந்து வந்த பாதை!

Subhadeep Ghosh Fielding Coach: சுப்தீப் கோஷ் தேசிய கிரிக்கெட் அகாடமி, இந்தியா 'ஏ' அணி, மற்றும் ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுடன் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு சுப்தீப் கோஷ் கௌதம் காம்பீருடனும் பணியாற்றியுள்ளார். 2014-ல், காம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, ​​சுப்தீப் கோஷ் அந்த அணியின் துணை பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்தார்.

Team India: சர்வதேச போட்டியில் விளையாடியது கிடையாது.. இந்திய பயிற்சியாளராக நியமனம்.. சுப்தீப் கோஷ் கடந்து வந்த பாதை!
சுப்தீப் கோஷ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2026 17:08 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சுப்தீப் கோஷை இந்திய அணியின் (Indian Cricket Team) புதிய பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சுப்தீப் இதற்கு முன்பு இந்திய சீனியர் அணிக்காக விளையாடியதில்லை, ஆனால் தற்போது பயிற்சியாளராக இந்திய அணிக்குள் தனது முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராக உள்ளார். 57 வயதான சுப்தீப் கோஷ் (Subhadeep Ghosh) இந்திய கிரிக்கெட்டில் அவ்வளவு பரிட்சயம் இல்லையென்றாலும், அஸ்ஸாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி, படிப்படியாக ஒரு பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். சுப்தீப் கோஷ் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் 17 போட்டிகளில் 316 ரன்களும், அதே எண்ணிக்கையிலான லிஸ்ட் ஏ போட்டிகளில் 307 ரன்களும் எடுத்தார்.

ALSO READ: இந்திய அணிக்கு இவர்தான் இனி புதிய பயிற்சியாளர்.. யார் இந்த சுப்தீப் கோஷ்?

சுப்தீப் கோஷ் பயிற்சியாளர் ஆன கதை:


கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுப்தீப் கோஷ் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து, வளரும் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். கடந்த 15 ஆண்டுகளாக, சுப்தீப் கோஷ் ஒரு சிறந்த பீல்டிங் பயிற்சியாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஒவ்வொரு வீரரையும் தனித்தனியாக மதிப்பீடு செய்து, அவர்களின் நகர்வுகள், பலங்கள் மற்றும் முன்னேற்றம் தேவைப்படும் இடங்களை ஆராய்வதே சுப்தீப்பின் சிறப்பு. அடிமட்டத்திலிருந்து இந்திய கிரிக்கெட்டின் உச்சத்திற்கு உயர்ந்துள்ளார்.

சுப்தீப் கோஷ் தேசிய கிரிக்கெட் அகாடமி, இந்தியா ‘ஏ’ அணி, மற்றும் ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுடன் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு சுப்தீப் கோஷ் கௌதம் காம்பீருடனும் பணியாற்றியுள்ளார். 2014-ல், காம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, ​​சுப்தீப் கோஷ் அந்த அணியின் துணை பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்தார்.

ALSO READ: எதிர்கால திட்டத்தில் அவர் இல்லை.. ஷமி குறித்த கேள்வி.. ஷாக் பதில் கொடுத்த அகர்கர்!

அண்மையில், சுப்தீப் கோஷ் இந்தியா ‘ஏ’ அணியுடன் இலங்கைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு, திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பல இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களும் சுப்தீப்பைப் பாராட்டியுள்ளனர், இதுவே அவர் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Follow Us